Bigg Boss 3 பார்வையாளர்களே, நீங்கள் நினைப்பது மட்டும் சத்தியமா நடக்காது

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : வீட்டிற்குள் தப்பாக நடந்துகொண்ட வைதி - வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது மட்டும் சத்தியமாக நடக்காது அதுவும் இந்த வாரம் நடக்க வாய்ப்பில்ல ராஜா.

பிக் பாஸ் 3 வீட்டில் அத்தனை பேர் இருந்தும் கவின், லாஸ்லியா, சாக்ஷி ஆகியோரையே மீண்டும் மீண்டும் காட்டி கடந்த வாரத்தை ஓட்டினார்கள். சரி இந்த வாரமாவது முக்கோண காதல் கதையை காட்ட மாட்டார்கள் என்று பார்வையாளர்கள் நினைத்தார்கள்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவை பார்த்தால் கவின், சாக்ஷி, லாஸ்லியா தான் இந்த வார கன்டென்ட் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மாற்றம்

மாற்றம்

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் பிக் பாஸ், தயவு செய்து இயக்குநரை மாற்றுங்கள். கிரியேட்டிவிட்டி என்பதே அவரிடம் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி சீரியல்களே எவ்வளவோ பரவாயில்லை போன்று. இந்த அளவுக்கு சீரியல்கள் கூட ஜவ்வாக இழுக்கவில்லை. கடந்த வாரம் எங்கள் கழுத்தை அறுத்தது போதாது என்று இந்த வாரமும் கவினும், சாக்ஷியுமா என்று பார்வையாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

சாக்ஷி

சாக்ஷி

சாக்ஷியை பார்த்தால் பத்திக்கிட்டு வருகிறது. தயவு செய்து அவரை இந்த வாரம் வெளியேற்றிவிடுங்கள். சாக்ஷி ரொம்பவே போலியாக உள்ளார். எங்களுக்கு அவரை சுத்தமாக பிடிக்கவில்லை என்பது தெரியாமல் ஓவராக சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் கவினுக்காக போடும் டிராமாக்கள் சகிக்கவில்லை என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

கவின், சாக்ஷியை வைத்து தான் இந்த வாரத்தையும் ஓட்டப் போகிறார்கள் என்பது தெரிகிறது. அதனால் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது போன்று சாக்ஷியை இந்த வாரம் நிச்சயம் வெளியேற்ற மாட்டார் பிக் பாஸ். பார்வையாளர்களை கடுப்பேற்றி கதறவிடுவதில் அவருக்கு தனி சுகம். அதனால் இந்த வாரமும் உங்களை கதறவிடப் போகிறார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸுக்கு கவினை ரொம்ப பிடித்திருக்கிறது போன்று. அதனால் தான் அவரையே காண்பிக்கிறார். அவ்வளவு பிடித்திருந்தால் அவரை வெளியேற்றிவிட்டு ஒரு நல்ல சீரியலில் அவரை ஹீரோவாக போட்டு எந்நேரம் க்ளோசப்பில் காண்பித்துக் கொண்டே இருக்கட்டும் என்பது பார்வையாளர்களின் கருத்து. கவினையும், சாக்ஷியையும் இப்போதைக்கு வெளியேற்ற வாய்ப்பில்ல ராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X