ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 10ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: நேற்றைய எபிசோடில் மகேஷ் வெற்றியை ஜெயிலில் சந்தித்து நக்கல் அடித்து பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம். துளசி வெற்றி நிச்சயம் அப்படி செஞ்சிருக்க மாட்டார் என்று சொல்ல அஞ்சலி நாம உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் கண்டிப்பா மாமா வெளியே வந்துடுவாரு என்று ஆறுதல் சொல்கிறாள். மறுபக்கம் ஈஸ்வரமூர்த்தி இதுக்கு தான் பயந்தேன் என்று புலம்பி கொண்டு இருக்க இதைப் பார்த்த மீனாட்சி இப்பதான் இந்த வீட்டை பார்க்க சந்தோஷமா இருக்கு.. ஒரு உயிர் போனால் இன்னும் சந்தோஷமாக இருக்கும் என்று மனதுக்குள் நினைக்கிறாள். பிறகு அங்கு வந்த மீனாட்சி இதுக்கெல்லாம் காரணம் அந்த துளசி தான் அவ அந்த வீட்டுக்குள்ள இருக்கக்கூடாது என்று சொல்கிறாள். ஈஸ்வரமூர்த்தி நீ சொல்றது சரி தாம்மா.. அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப என்ன வேணா பண்ணு உனக்கு துணையா நான் இருக்கேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
அடுத்ததாக லட்சுமி வீட்டுக்கு வந்த வீட்டு ஓனர் பல மாசமா வாடகை கொடுக்காமல் இருக்கீங்க.. உங்களை இப்படி எதுவும் விட முடியாது இன்னைக்கு சாயங்காலம் ஒரு ஃபேமிலி வீடு பார்க்க வருவாங்க அவங்களுக்கு ஓகேனா உடனடியாக காலி பண்ணியாகணும் என்று சொல்கிறார். இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அஞ்சலி அவரிடம் கெஞ்சி இறுதியாக ஒரு வாரம் மட்டும் டைம் கொடுக்க சொல்லி கேட்கிறாள். பிறகு ஹவுஸ் ஓனரும் டைம் கொடுத்து விட்டு செல்ல அஞ்சலி வேலைக்கு போக முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறாள். லட்சுமி நீ கர்ப்பமாக இருக்க அதனால இதெல்லாம் வேண்டாம் என்று அஞ்சலி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்கிறாள். இந்த விஷயம் ரகுவரன் மூலமாக மகேஷுக்கு தெரிய வருகிறது. ரகுவரன் உடனடியாக கோர்ட்டுக்கு போய் இதை தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்ல நான் எதுக்கு கோர்ட்டுக்கு போகணும்? அஞ்சலி கிட்ட எப்படி அப்படி பேசுறேன் என்று அஞ்சலியை பார்க்க கிளம்புகிறான்.

அண்ணா: சௌந்தரபாண்டி வீட்டுக்கு அந்த சாமியார் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு தேங்காயை உடைக்க அதில் தேங்காய் தண்ணீருக்கு பதிலாக ரத்தம் வர பாண்டியம்மாவின் ஆத்மா தோன்றி அது என்னுடைய ரத்தம் நான் உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி பயந்து போகிறார். மேலும் வந்த சாமியார் எங்களால இந்த பேயை ஓட்ட முடியாது இந்த பேயிடமிருந்து உங்கள காப்பாற்ற ஒருத்தரால் மட்டும்தான் முடியும்.. அது அசாருதீன் பாய் தான் என்று சொல்லி ஓடுகின்றனர். சிவபாலன் எனக்கு அந்த பாயை தெரியும் என்று சொல்லி சௌந்தரபாண்டியை தர்காவுக்கு அழைத்துச் செல்கிறான்.
தர்காவில் சண்முகம் அசாருதீன் பாய் ஆக்க கெட்டப்பில் இருக்க சிவபாலன் அப்பாவை கூட்டிட்டு வந்துட்டேன் என்று சொல்கிறான். நீ ஒரு சாத்தான், உன் உடம்புல அந்த பாண்டியம்மாவோட ஆத்மா இருக்கு. அந்த ஆத்மா உங்க வீட்டை விட்டு முழுசா பாக்கணும்னா ஒரு நல்ல சக்தி உன் வீட்டுக்குள்ள வரணும் என்று சொல்கிறான். நல்ல சக்தியா அதுக்கு நான் இங்கே போவேன் என்று சௌந்தரபாண்டி கேட்க உன் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வந்திருக்கும்.. அதுதான் அந்த நல்ல சக்தி. அந்த குழந்தை உன் வீட்டில் இருக்கிற வரைக்கும் உன்னை யாராலயும் நெருங்க முடியாது என்று சொல்கிறான்.
பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில் நளினி பாட்டு பாடி கல்யாண மண்டபத்தை கலகலப்பாக்கிய நிலையில் இன்று நடக்கப் போவதை பார்க்கலாம். விஷால் பாட்டு பாட வர்ஷினி இசை மற்றும் விஷால் இருவரும் சேர்ந்து நடனம் ஆடுவது போல நினைத்து பார்க்கிறாள். பிறகு இசையை பாட்டு பாட சொல்கின்றனர். இசை சிறு வயதில் பாடிய பாடலை திரும்ப பாட சுபத்ராவுக்கு பிளாஷ்பேக் காட்சிகள் வந்து போகிறது. இதனால் இந்த பாட்டை நீ தான் பாடுனியா? உன் அப்பா அம்மா எங்கே என்று கேட்க அப்பா அம்மா ஒரு ஆக்சிடென்ட்டில் இறந்து விட்டதாக இசை சொல்கிறாள். ஸ்ரீஜாவுக்கு என் அம்மாவோட சாவுக்கு நீ தான் காரணமா உன்ன சும்மா விடமாட்டேன் என்று இசையின் மீதான கோபமும் பழிவாங்கும் எண்ணமும் அதிகமாகிறது. அதன் பிறகு மெஹந்தி போட ஆட்கள் மண்டபத்திற்கு வர முதலில் பொண்ணுக்கு தான் மெஹந்தி போடணும் என்று சொன்னதும் அவர்கள் ஸ்ரீஜாவுக்கு பதிலாக இசைக்கு மெஹந்தி போட்டு விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











