ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 12ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியல், ஈஸ்வரமூர்த்தியிடம் என் மேல கோபமும் இருந்தாலும் பரவாயில்லை வெற்றியை எப்படியாவது வெளியே எடுங்க என்று உதவி கேட்கிறாள். உடனே ஈஸ்வரமூர்த்தி, என் பையனை எப்படி வெளியில், எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். ஆனால், அவன் ஜெயிலுக்கு போக காரணமான நீ அவனை விட்டும், இந்த குடும்பத்தை விட்டும் வெளியே போவதாக கையெழுத்து போட்டு நான் அவனை வெளியே எடுக்குறேன் என்று சொல்ல துளசி அதிர்ச்சி அடைகிறாள். வெற்றி வெளியே வரவேண்டும் என்பதற்காக இதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.
மறுபக்கம், மகேஷ் அஞ்சலி அந்த கம்பெனிக்கு வேலைக்கு போகாத அவன் நல்லவன் இல்லை என்னை பழி வங்குவதற்காக உன்னை ஏதாச்சு செய்வான் என்று சொல்ல அஞ்சலி அதை காது கொடுத்து கேட்காமல் வேலைக்கு செல்கிறாள். அந்த கம்பெனியின் பாஸ் உங்க ஹஸ்பண்ட் உங்கள வேலை கிடைக்க வேண்டாம். நீ என்னை சந்தித்து சொன்னாரு ஆனா உங்க கிட்ட ஏதோ திறமை இருக்கு நீங்க கண்டிப்பா நல்லா வேலை பண்ணுவீங்கன்னு நம்புகிறேன் ஆல் தி பெஸ்ட் என்று சொல்கிறான். பிறகு கார் பார்க்கிங்கில் மகேஷ் அந்த கம்பெனி பாஸை சந்தித்து என்ன சுத்தி இருக்கவங்க எல்லோருடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கிறவன் நான்.. நீ என் பொண்டாட்டியோட வாழ்க்கையை தீர்மானிக்கிறாயா என்று கோபப்பட்டு அவனை கொளுத்த தயாராகிறான். மறுபக்கம், அஞ்சலி வெற்றியை சந்தித்து பேசுகிறாள். அப்போது துளசியைப் பார்த்த வெற்றி, ஏன் மேடம் டல்லா இருக்கீங்க, நான் கண்டிப்பா சீக்கிரம் வெளியே வந்துடுவேன் கவலைப்படாதீங்க என்று சொல்ல துளசி வெற்றியை பிரியப்போவதை மனதில் நினைத்துக் கொண்டு இங்கு கண்டிப்பாக வெளியே வருவீங்க வெற்றி என்று ஆறுதல் சொல்கிறாள்.

அடுத்து சண்முகம் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல் கட்டுவதற்கான ப்ளூ பிரிண்ட்டுடன் வந்து விளக்கி கொண்டிருக்க இதை பார்த்து பரணி, இவ்வளவு தெரிய மருத்துவமனை கட்ட எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா, பணத்திற்க எங்கே போவது என்று கேட்க, சணமுகம், மருத்துவமனை பெயரே செந்தூர் முருகன் மருத்துவமனை தான், அந்த முருகனே மருத்துவமனை கட்டுவதற்கான பணத்தை நிச்சயம் தருவார் என்று சொல்கிறான்.



Click it and Unblock the Notifications











