ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 17ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியல், துளசிக்காக லட்சுமி சிவகாமி ஈஸ்வரமூர்த்தி வீட்டில் பேச வருகின்றனர்.
அவர்களிடம் பேச முடியாது என்று சென்ன ஈஸ்வரமூர்த்தி, துளசிக்கு போன் செய்து கையெழுத்து போட்டு தர மாதிரி தந்துட்டு அங்க போய் அம்மாவ அனுப்பி வச்சிருக்கியா என்று கேள்வி கேட்க துளசி லட்சுமிக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைக்கிறாள். என் வாழ்க்கையில யாரும் தலையிட வேண்டாம். நான் இங்கே இருக்கிறது பிடிக்கலைன்னா சொல்லுங்க வேற எங்கயாச்சும் போய்டுறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.

பிறகு வெற்றி ஜாமுனில் வீட்டுக்கு வர மீனாட்சி அவனிடம் நலம் விசாரிப்பது போல பேசி துளசியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய விஷயத்தை கொளுத்தி போடுகிறாள். இதனால் வெற்றி ஈஸ்வரமூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. அடுத்த நாள் வெற்றி, தியாவை பார்ப்பதற்காக ஸ்கூல் வாசலில் காத்துக் கொண்டிருக்க துளசி அவனைப் பார்த்து கோபப்படுகிறாள். இனிமே என்னையும் என் குழந்தையையும் பார்க்க வராதீங்க என்று திட்டிவிட்டு கண்ணீருடன் இங்கிருந்து கிளம்புகிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: சண்முகம் கோவில் நகையை வைத்து ஹாஸ்பிடல் கட்டப் போவதாக சொல்ல சௌந்தரபாண்டி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். கோவில் நகையை வைத்து நீ உன் குடும்பத்தை பார்க்க பார்க்கிற என சௌந்தரபாண்டி பழி சுமத்துகிறார். பிறகு எல்லோரின் சம்மதத்துடன் சண்முகம் கோவில் நகையை வைத்து ஹாஸ்பிடல் கட்ட அனுமதி கிடைக்க சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார். அடுத்ததாக கோவில் நகையை வைத்து பணம் திரட்டுவதற்காக பேங்கில் பேச வேண்டிய நிலை உருவாகிறது. சண்முகம் மற்றும் பரணி என இருவரும் இது குறித்து பேசிக்கொண்டு பைக்கில் செல்கின்றனர். அப்போது பத்திரிக்கையாளர்கள் இவர்களை வழிமறித்து கோவில் நகையை வைத்து ஹாஸ்பிடல் கட்ட போறிங்களா? இதுவரைக்கும் இல்லாத புதிய திட்டமா இருக்கு.. இது ஐடியா உங்களுக்கு எப்படி தோணுச்சு என்று கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்துவிட்டு இங்கிருந்து கிளம்புகின்றனர்.

இதையெல்லாம் டிவியில் பார்த்த சௌந்தர பாண்டி கடுப்பாகிறார். இந்த நேரத்தில் டிவிக்கு கீழே ஹலோ கிராம் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பாண்டியம்மா ஆவி குறித்து நடந்தது அனைத்தும் செட்டப் என்பதை தெரிந்து கொள்கிறார். சிவபாலனை கூப்பிட்டு அடித்து என் முகத்திலேயே முழிக்காத என கோபப்படுகிறார். மேலும், என்னை ஏமாற்றிய உன்னையும், அந்த சிவபாலனையும் நான் நிம்மதியா இருக்க விட மாட்டேன் என்று சவால் விடுகிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: மண்டபத்தில் ஸ்ரீஜாவை காணவில்லை என அனைவரும் தேட தொடங்க சரியான நேரத்தில் ஸ்ரீஜா உள்ளே வந்து விடுகிறாள். ராகவ்வை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்ல இனிமே அந்த ஸ்ரீஜா கல்யாண பொண்ணா இருக்க கூடாது, நீங்களே மணப்பெண்ணாக மாறிடுங்க என்று சொல்ல இசை அது எப்படி சரியா வரும் என யோசிக்கிறாள். இதனை தொடர்ந்து ஸ்ரீஜா மற்றும் வர்ஷினியை பியூட்டி பார்லர் சென்று வர சொல்கின்றனர், ராகவ் பியூட்டி பார்லருக்கு போன் செய்து ஒரு பொண்ணுக்கு மேக்கப் போடுற மாதிரி போட்டு மயங்க வைக்கணும் என்று சொல்கிறான். பிறகு ஸ்ரீஜாவும் வர்ஷினியும் மண்டபத்திற்கு வருகின்றனர், ராகவ் ஸ்ரீஜாவை கை காட்டி நான் சொன்ன பொண்ணு அவங்க தான் என்று சொல்கிறான்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X