ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 18ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியல், வெற்றி, தியாவை பார்ப்பதற்காக ஸ்கூல் வாசலில் காத்துக் கொண்டிருக்க துளசி அவனைப் பார்த்து கோபப்படுகிறாள். இனிமே என்னையும் என் குழந்தையையும் பார்க்க வராதீங்க என்று திட்டிவிடுகிறாள். இதனால் மன வேதனை அடைந்த வெற்றி, கவலையில் அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு, துளசி வீட்டிற்கு வந்து தகராறு செய்கிறான். இதனால், ஆத்திரப்படும் துளசி, நான் என் முடிவை சொல்லிவிட்டேன். இனிமேல் நான் உங்களுடன் சேர்ந்து வாழமாட்டேன், நீங்க வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறாள். உடனே வெற்றி, நீங்க சொன்னது போலவே நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால், அந்த பெண்ணை நீங்கதான் பார்த்து தரவேண்டும் என சொல்கிறான். இதற்கு துளசியும் சம்மதம் சொல்கிறாள்.
அண்ணா: நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சிவபாலன் அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்வி விடுகிறார். இதையடுத்து, இன்றைய எபிசோடில், ஸ்கூலில் பள்ளி மாணவர்கள் சிலர் சிகரெட் பிடிக்க ரத்னா, அறிவழகன் ஆகியோர் அவர்களின் அப்பா அம்மாவை ஸ்கூலுக்கு வரவைத்து கண்டிக்கின்றனர். அடுத்ததாக சிவபாலன், வீரா ஆகியோர் சண்முகம் வீட்டிற்கு வந்து சௌந்தரபாண்டிக்கு விஷயம் தெரிந்து அடித்து வீட்டை விட்டு அனுப்பிய விஷயத்தை சொல்கின்றனர். சண்முகம் இதனை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அனுப்புகிறான்.

அதைத்தொடர்ந்து ரத்னா, அறிவழகன் ஆகியோர் வீட்டுக்கு வந்து ஸ்கூலில் நடந்த பிரச்சனை குறித்து சொல்ல சண்முகம் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறான். மறுபக்கம் பாக்கியம் குழந்தையை ரூமுக்கு தூக்கி செல்ல சௌந்தரபாண்டி இனிமே இந்த குழந்தை என் ரூமுக்கு வரக்கூடாது என கோபப்படுகிறார்.பிறகு சண்முகம் குடும்பத்தினர் குழந்தைக்கு அன்னம் ஊட்டும் நிகழ்வுக்காக வீட்டுக்கு வருகின்றனர். சௌந்தரபாண்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என அடம்பிடிக்கிறார்.
பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில் ராகவ் இசையை மணப்பெண்ணாக மாற சொல்லிய நிலையில் இன்று,
சிந்தாமணி வர்ஷினி மற்றும் ஸ்ரீஜாவை அழைத்து கொண்டு பியூட்டி பார்லருக்கு வருகிறாள். ராகவ் ஸ்ரீஜாவை கை காட்டி இவ தான் அந்த பொண்ணு என்று சொல்ல மேக்கப் போடுவது போல் மயக்க மருந்து அடித்து அவளை மயங்க வைக்கின்றனர். இதையடுத்து வர்ஷினி, ஸ்ரீஜாவை ஒரு ரூமுக்குள் அடைத்து வைக்கிறாள். பிறகு இசையை உட்கார வைத்து மேக்கப் போடுகின்றனர். இறுதியாக அலர்ஜி ஆகி விட்டதாக சொல்லி இசையின் முகத்தை மூடி விடுகின்றனர். சிந்தாமணியையும் நம்ப வைத்து மண்டபத்திற்கு அனுப்பி வைக்க சுபத்ரா ஏன் முகத்தை மூடி கூட்டி வந்திருக்க என்று கேட்க சிந்தாமணி அலர்ஜி என்று சொல்கிறாள். பிறகு இசை முகத்தை மூடியபடி மணப்பெண்ணாக மணமேடை ஏறி அமர்கிறாள்.


Click it and Unblock the Notifications











