ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 1ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில், வெற்றி, அஞ்சலி, லட்சுமி ஆகியோர் முருகனை காணாமல் தேட ஆரம்பிக்கிறார்கள். முருகன் பணத்துக்காக ஸ்டேஷனில் போய் ஆஜர் ஆகிறான். இந்த விஷயம் தெரியாமல் அவன் எங்க போனேன் என்று வீட்டில் உள்ளவர்கள் தேடுகின்றனர். முருகனை என்கவுண்டரில் சுட்டு தள்ளுவதற்கும் போலீசுக்கு ஆர்டர் போடுகிறான் ஈஸ்வரமூர்த்தி. அவன் சொன்னதை போலவே முருகன் கதையை முடிப்பதற்கு போலீசார் முடிவு செய்கின்றனர். மற்றொரு பக்கம் முருகனை என்கவுண்டரில் போட்டு தள்ளுவதற்காக ஈஸ்வரமூர்த்தி ஆர்டர் போடுவதால், போலீசார் அவனை அழைத்து செல்கின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கதிர், முருகனை காப்பாற்றுகிறார். இதையடுத்து, முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறான்.

அண்ணா: சனிக்கிழமை எபிசோடில், வீட்டுக்கு வரும் வீரா, சென்னையில் இருந்து வந்த ஒரு ஜோடிக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டதாக பேசி கொண்டிருக்க அப்போது, விபத்தில் சிக்கிய பெண் போலீசுடன் பணத்தை காணவில்லை என்று சோதனையிட போலீஸ் டீம் வீட்டிற்கு வந்து சோதனை போடுகின்றனர். வீட்டில், காணாமல் போன பேக் இருப்பதால், அந்த பையை திறந்து பார்க்க அதில் பணம் இல்லை என்று தெரிய வருகிறது. இதனால் திருட்டு கேசில் வீராவையும் சிவபாலனையும் கைது செய்கின்றனர்.
இதையடுத்து, முத்துப்பாண்டி கார் விபத்தில் சிக்கியவர்களிடம் விசாரணை நடத்துகிறார். அதில், காணாமல் போன பணம் எவ்வளவு என்று கேட்க, அவர்கள் 8 லட்சம் ரூபாய் என்று சொல்கின்றனர். இதை நீங்க யாரிடமாவது சொன்னீர்களா என்று கேட்க, அவர்கள் நாங்கள் யாரிடமும் பணத்தை பற்றி சொல்லவில்லை என்று சொல்ல, முத்துப்பாண்டிக்கு அந்த போலீஸ் அதிகாரி மீது சந்தேகம் வருகிறது. இதையடுத்து ரத்னா கொடுத்த வீடியோவைத்து, இரண்டு ரவுடியை கண்டுபிடித்து முத்துப்பாண்டி கைது செய்து விசாரிக்கிறார்.
பாரிஜாதம்: பாரிஜாதம் சீரியலில், ஸ்ரீஜாவை கடத்துவதற்கு ரௌடிகளை ஏற்பாடு செய்தது இசை தான் என்று ஸ்ரீஜா சொல்கிறாள். இதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் இசையை சந்தேகப்படுகின்றனர். இசை இதை நான் செய்யவில்லை என்பதை நிரூபிக்கிறேன் என்று ஒரு திட்டத்தை போட்டு, போலீஸ் ரவுடிகளும் வீட்டிற்கு வரும் போது தனது தங்கை, நான் இசை என்று சொல்லி, அந்த ரௌடிகளிடம் பேசு என்கிறார். இசை சொன்னது படியே, வர்ஷினி அந்த ரௌடிகளிடம், நான் தான் ஸ்ரீஜாவை கடத்த சொன்னேனா என்று கேட்க, அந்த ரௌடிகள் நீங்க தான் கடத்த சொன்னீங்க என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து போகுகின்றனர். இதனால், ஸ்ரீஜாவை இசை கடத்த வில்லை என்பது தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











