ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 22ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் வெற்றி வேறொரு திருமணத்திற்கு சம்மதம் சொன்ன நிலையில், வெற்றியை திருமணத்திற்காக புடவை எடுக்க அனைவரும் செல்கின்றனர். அப்போது,வெற்றி ஒரு நிமிஷம் ஒரு முக்கியமான ஆள் வர வேண்டி இருக்கு என்று சொல்ல எல்லோரும் யார் என கேட்க துளசி அங்கு என்ட்ரி கொடுக்கிறாள். பிறகே கல்யாண பொண்ணு துளசி இடம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்துக் கொண்டு வெற்றியை எதுக்காக பிரிந்தீங்க டௌரி ஏதாவது கேட்டாரா என்று விசாரிக்க துளசி அதெல்லாம் இல்லை சொல்ல முடியாத காரணம் ஒன்று இருப்பதாக சொல்கிறாள். பிறகு நாளைக்கு நாங்க வாழ்க்கை தொடங்கும் போது நீங்க வந்து பிரச்சனை பண்ண மாட்டீங்களே என்று கேட்க துளசி சத்தியமா உங்க வாழ்க்கையில் நான் பிரச்சனை பண்ண மாட்டேன் என வாக்கு கொடுக்கிறாள்.
இதைக்கேட்ட மீனாட்சி அபிராமி இடம் சொல்ல அபிராமி நிம்மதி அடைகிறாள். பிறகு துளசி இங்கிருந்து கிளம்ப தயாராக வெற்றி ஒரு நிமிஷம் மேடம்.. நீங்களே ஒரு நல்ல புடவையா தேர்ந்தெடுத்து கொடுத்துட்டு போங்க என்று சொல்ல துளசி வேலை இருப்பதாக சொல்ல நீங்களே ஒரு நல்ல புடவையா எடுத்துக் கொடுத்தாதான் நீங்க முழு மனசால தான் இந்த முடிவு எடுத்திருக்கிறதா நம்பி நான் இந்த வாழ்க்கைக்குள்ள போவேன் என்று சொல்கிறான். இதனால் துளசி வேறு வழி இல்லாமல் கல்யாண பொண்ணுக்கு பிடித்த கலரைக் கேட்டு ஒரு புடவையை தேர்வு செய்து கொடுக்கிறாள். பிறகு அந்த பெண் நீங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு ஒரு போட்டோ எடுங்க என்று சொல்லி கேட்க துளசி மன வலியோடு போட்டோ எடுத்து கொடுக்கிறாள்.

அண்ணா: கோவில் நிர்வாக டாக்குமெண்ட் வரவு செலவு என அனைத்தையும் சண்முகம் பேங்க் அலுவலர்களிடம் காட்டுகிறான். அதை எல்லாம் பரிசோதனை செய்த பேங்க் அலுவலர்கள் சௌந்தரபாண்டியிடம் நீங்க எதுவும் பொறுப்பு எடுத்துக்கலையா என்று கேட்க இல்லை என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து பேங்க் அலுவலகத்தில் கிளம்பி செல்ல சௌந்தரபாண்டி ரவுடிகளை சந்தித்து பணத்தை கொடுத்து ஏதோ பொருட்களை வாங்க எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த சண்முகம், பரணி இதைப்பார்த்து வீடியோ எடுத்து விடுகின்றனர்.
இதை முத்துப்பாண்டியிடம் காட்டி உங்க அப்பா ஏதோ தப்பு பண்றாரு என்னன்னு கவனிச்சுக்கோ என்று சொல்கின்றனர். வீட்டில் பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் உக்கார்ந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க அங்கு வந்த சௌந்தரபாண்டி கையில் இருக்கும் பையை எப்படியாவது உள்ளே கொண்டு வரவேண்டும் என யோசிக்கிறார். இதனால் குழந்தையை வாங்கி கொஞ்சுவது போல கொஞ்சி இருவரையும் திசை திருப்பி சனியன் மூலமாக அந்த பையை வீட்டுக்குள் கொண்டு போய் சேர்க்கிறார். பரணி மற்றும் சண்முகம் என இருவரும் சௌந்தரபாண்டி அப்படி என்ன வாங்கினார் என யோசிக்கின்றனர்.

பாரிஜாதம்: இசை கழுத்தில் தாலி கட்டிய விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவதை பார்க்கலாம். அதாவது ஸ்ரீஜா இசையின் தாலியை கழட்ட போக இசை தாலி மேலே கைய வச்ச அவ்வளவுதான் என எச்சரிக்கிறாள். பிறகு ஸ்ரீஜாவின் அப்பா என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதில் என சுபத்ராவை பார்த்து கேள்வி கேட்கிறார். மேலும் இனிமேல் என் மகளை யார் கல்யாணம் பண்ணிப்பா? உங்க பெரிய பையனுக்கு கட்டி வையுங்க என்று சொல்ல சுபத்திரா யோசிக்க பாருங்க நீங்களே யோசிக்கிறீங்க அப்போ என் பொண்ணோட வாழ்க்கை அவ்வளவுதான் என்று டிராமா போட ஸ்ரீஜாவும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ரூமுக்குள் ஓடுகிறாள். இதனால் சுபத்ரா ஸ்ரீஜாவை சந்தித்து உன்னை என் வீட்டு மருமகளாக என சத்தியம் செய்து வாக்கு கொடுக்கிறாள். இந்த விஷயத்தை அறிந்த ராகவ் அதிர்ச்சி அடைகிறான்.


Click it and Unblock the Notifications











