ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 26ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டி மேளம் சீரியலில் வெற்றிக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக மணமேடை ஏறிய நிலையில் இன்று நடக்கப்போவதை பார்க்கலாம். அதாவது வெற்றி. மணமேடையில் இருக்க தியா, இனிமே உங்கள அப்பான்னு கூப்பிட முடியாதா என்று சொல்லி வருத்தப்பட வெற்றியும் பீல் செய்கிறான். பிறகு வெற்றியை கல்யாண பொண்ணு கழுத்தில் தாலி கட்ட சொல்ல அவன் செய்கையில் நீங்க வந்து தாலி எடுத்து கொடுத்தால்தான் கட்டுவேன் இல்லனா இந்த கல்யாணமே வேண்டாம் என்று ஷாக் கொடுக்கிறான். ஆனாலும் முதலில் முடியாது என மறுக்கும் துளசி பிறகு மண மேடைக்கு செல்கிறாள்.

இதையடுத்து துளசி மணமேடைக்கு ஏற மீனாட்சி அபிராமி ஆகியோர் கோபப்பட வெற்றி அவர்களை கூல் செய்கிறான். பிறகு துளசி தாலி எடுத்து வெற்றி கையில் கொடுக்க கல்யாண பொண்ணு கழுத்தில் கட்டப் போன வெற்றி பின்னாடி நின்றிருந்த துளசி கழுத்தில் மீண்டும் தாலி கட்டுகிறான். இதனால், கோவப்படும் ஈஸ்வரமூர்த்தி எப்படி என் மானத்தை வாங்கிட்டியே என்று சட்டையை பிடித்து கோபப்பட வெற்றி நீங்க துளசியை எப்படி என்கிட்ட இருந்து பிரிச்சீங்க என்று எனக்கு தெரியும் என்ற உண்மையை உடைக்கிறான். மேலும், மேடையில் இருந்த பெண், வெற்றி என்னை ஏமாத்தல எனக்கு எல்லாம் தெரியும். எனக்கு உதவி பண்ண தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதாக சொல்கிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி இவன் தான் போதைப்பொருளை வீட்டுக்குள் வைத்தது என்று சொல்லி சனியனை பிடித்து கொடுக்கிறார். ஆனால் முத்துப்பாண்டி மற்றும் சண்முகம் ஆகியோர் இல்ல இந்த வேலையை செஞ்சது நீங்கதான் அதற்கான ஆதாரம் எங்ககிட்ட இருக்கு என்று ஃபோட்டோக்களை காட்டுகின்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சியாகும் சௌந்தரபாண்டி எதை ஒன்றை சொல்லி அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு வருகிறார். பிறகு சிவபாலனும் ரிலீஸ் செய்யப்படுகிறான். எல்லோரும் வீட்டுக்கு வந்ததும் பெத்த புள்ளையே பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளி இருக்கான் என்று சௌந்தரபாண்டியை திட்டி கோபப்படுகின்றனர்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த பரணி, சண்முகம் சௌந்தரபாண்டி பெத்த புள்ளைக்கே இப்படி பண்ணியிருக்காரு. நல்ல வேலை குழந்தை சூடாமணியை ஒன்னும் பண்ணல என்று பேசிக்கொள்கின்றனர். அடுத்ததாக சண்முகம் பரணி ஹாஸ்பிடல் கிளம்ப ரத்னாவுக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வருகிறது. இதனால் ரத்னாவை பார்க்க கிளம்பி செல்கின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: சீரியலில், ஸ்ரீஜா இசையை சந்தித்து உன்னையும் உன் குடும்பத்தையும் இந்த வீட்டை விட்டு துரத்தாம ஓய மாட்டேன் என்று சவால் விடுகிறாள். இதனால் ஆத்திரப்படும்
இசை, உன்ன இந்த வீட்டை விட்டு வெளியே துரத்தி. ராகவுக்கும் வர்ஷினிக்கும் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சபதம் எடுக்கிறாள். மறுபக்கம் இசை, விஷாலிடம் ஸ்ரீஜா நல்ல இல்லை, அவள் உங்களை உண்மையா காதலிக்கல, இந்த குடும்பத்தை கெடுப்பதற்காகத்தான் இந்த வீட்டிற்குள் வந்து இருக்கா என்று சொல்ல, ஆத்திரப்படும் விஷால் இதுக்கு மேல நீ சொல்ற பொய்ய என்னால நம்மமுடியாது என்று கோவத்தோடு அந்த அறையைவிட்டு செல்கிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X