ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 29ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: சனிக்கிழமை எபிசோடில் சிவராமன் உயிருடன் இருப்பது தெரியவந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. இன்றைய எபிசோடில் சிவராமனை அடைத்து வைத்திருக்கும் மகேஷ் இனிமே உங்களால எங்கேயும் தப்பிக்க முடியாது என எச்சரிக்கிறான். மறுபக்கம் துளசி வீடு முழுக்க சாம்பிராணி போட்டு பூஜை செய்து எல்லோருக்கும் காபி கொடுக்கிறாள். இறுதியாக அபிராமிக்கு காபி கொடுக்க அவள் நீ எதுக்கு இதெல்லாம் பண்ற என்று கோபப்பட நீங்க எப்படி இந்த வீட்டுக்கு மருமகளா.. வந்தீங்களா அதே மாதிரி தான் நானும் மருமகளா வந்திருக்கேன். எனக்கும் இந்த வீட்ல முழு உரிமை இருக்கு என பதிலடி கொடுக்கிறாள்.
பிறகு ஆபீஸில் வேலை செய்யும் பெண் உருவத்தை குழந்தையை பார்க்க போகணும் என்று சொல்லி மகேஷிடம் கையெழுத்து வாங்குமாறு பைலை அஞ்சலி இடம் கொடுத்து விட அஞ்சலி வேறு வழி இல்லாமல் மகேஷ் வீட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அஞ்சலி வருவதை அறிந்த மகேஷ் அவளை வரவேற்க வீட்டை டெக்ரேட் செய்கிறான். வீடு முழுவதும் பூக்களால் அலங்கரித்து அஞ்சலியை வரவேற்கிறான். இது நீ வாழ போற வீடு திரும்பவும் நீங்கதான் வரப்போற என்று சொல்ல வந்தது நான் வெறும் கையெழுத்து வாங்க மட்டும்தான் வந்தேன் என்று பதில் அளிக்கிறாள். மகேஷ் நான் இப்போ மாறிட்டேன் என்று சொல்ல அதை நம்ப மறுக்கும் அஞ்சலி பொருட்களை இடமாற்றி வைக்க பழக்கம் போல மகேஷ் தன்னை மீறி டென்ஷன் ஆகி மீண்டும் பொருட்களை இருந்த இடத்தில் வைத்து சுத்தம் செய்ய தொடங்குகிறான்.

அண்ணா: வெற்றிக்கிழமை எபிசோடில் ரத்னாவுக்கு உடம்பு சரியில்லாமல் போன நிலையில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, எல்லோரும் ரத்னாவை பார்க்க வந்து உடம்பு முடியாத ரத்னாவை உட்கார வைத்துவிட்டு இன்றைக்கு ஆண்கள் எல்லோரும் சமைக்கிறோம் என்று சொல்லி சமையல் செய்ய களம் இறங்குகின்றனர். இதையடுத்து ஆண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமைக்கின்றனர். மறுபக்கம் சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்து சாப்பிட எதுவும் இல்லாமல் இருக்க பசியில் தவிக்கிறார். இங்கே சமையல் முடித்த ஆண்கள் அதை அனைவருக்கும் பரிமாறி சாப்பாடு எப்படி இருக்கு என்று கேட்கின்றனர். பிறகு பாக்கியம் வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி சாப்பாடு கூட செய்யாம எங்க போயிருந்த என்று சத்தம் போட என் அண்ணன் வீட்டுக்கு போயிருந்த என்று பதிலடி கொடுத்துவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

பாரிஜாதம்: இசை ஏமாற்றிய திருமணம் செய்து கொண்டதாக அவள் மீது கோபத்தில் இருக்கும் விஷால், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவனை தேடி இசை செல்கிறாள். விஷால் நன்றாக குடித்துவிட்டு போதையில் சாலையில் கிடைக்கிறான். அவனைப் பார்த்து பதறிப் போன இசை, வீட்டிற்கு அவனை அழைத்து வருகிறாள். போதையில் இருக்கும் விஷால், என் வாழ்க்கையை இசை வீணாக்கிவிட்டால், அவளால் என் வாழ்க்கையே வீணா போச்சு என புலம்பிக்கொண்டே வாந்தி எடுக்கிறான். அந்த வாந்தியை இசை கையில் வாங்குகிறாள் இதையடுத்து என்ன நடந்தது என்றுபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











