ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 2ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் முருகனை என்கவுண்டரில் இருந்து கதிர் காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கபோவதை பார்க்கலாம். ஈஸ்வரமூர்த்தி அவனை எதுக்கு காப்பாத்துன? உன்னை தான் இந்த விஷயத்தில் தலையிட வேணான்னு சொன்னேனே என்று கோப்பட, அவன் பாவம் பா என்று கதிர் சப்போர்ட் செய்து பேச வெற்றியை காப்பாற்றணும்னா அவன் சாகனும் அப்போ தான் கேஸை முடிக்க முடியும் என்று சொல்கிறார். பிறகு கதிர் நான் முருகன் கிட்ட பேசுறேன் என்று சொல்லி வெற்றி செய்த ஆக்சிடெண்ட்டுக்காக பழியை ஏற்றுக்கொள்ள சொல்லி பேசி முருகன் யோசிக்க தொடங்குகிறான்.

மறுபக்கம் செந்திலை வீட்டிற்கு அனுப்பி முருகன் வேலை விஷயமா வெளியூர் சென்றிருப்பதாகவும் வர 15 நாள் ஆகும் எனவும் சொல்ல அதை நம்பி விடுகின்றனர். முருகன் துளசியின் வாழ்க்கைக்காக பழியை ஏற்று கொள்ள போலீஸ் அவனை கைது செய்கிறது, ரேவதி கோவிலில் இருந்து வெளியே வரும் போது முருகனை போலீஸ் ஜீப்பில் பார்த்து அதிர்ச்சியாகி துரத்தி சென்று காரணம் கேட்க இன்ஸ்பெக்டர் சொல்ல மறுக்கிறார். பிறகு துளசியை சந்தித்து விஷயத்தை சொல்ல வெற்றி கோர்ட்டில் இருப்பவர் ஒருவருக்கு போன் செய்து முருகன் போட்டோவை அனுப்பி விசாரிக்க ஆக்சிடென்ட் கேசில் ஆஜரானதாக சொல்ல அதிர்ச்சி அடைகின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: முத்துப்பாண்டி சிசிடிவி காட்சியை ஆராயும் போது இன்ஸ்பெக்டர் தான் பணத்தை எடுத்தது என்று புரிந்து கொண்டு அந்த வீடியோவை பத்திரிகையாளர்களிடம் கொடுக்கிறான். மறுபக்கம் சௌந்தரபாண்டி வீராவை வேலையை ராஜினாமா செய் என்று லெட்டரில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்த சிவபாலன் முத்துபாண்டிக்கு தகவல் கொடுக்கிறான், முத்துப்பாண்டி டிவியை பார்க்க சொல்கிறான்.

டிவியில் இன்ஸ்பெக்டர் பணத்தை திருடியது என்று விஷயம் ஒளிபரப்பாக சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார். பிறகு முத்துபாண்டியும் வீராவும் சேர்ந்து தப்பி செல்ல முயற்சித்த இன்ஸ்பெக்டரை மடக்கி பிடித்து கைது செய்கின்றனர். மேலும் வீரா மாறன் வீராவிடம் பணத்தை ஒப்படைக்க அவர்கள் வீராவுக்கு நன்றி சொல்கின்றனர். மேலும் அவர்கள் சண்முகம் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு கிளம்பி செல்கின்றனர். அடுத்து சண்முகம் பரணி எந்த பிரச்சனையும் இல்லாமல் இசக்கியை சௌந்தரபாண்டி வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில். தாலி எடுக்க சுபத்திரா குடும்பத்தினர் சென்ற நிலையில் இன்று நடக்கப்போவதை பார்க்கலாம். நகை கடையில் வர்ஷினி தடுக்கி விழ ஸ்ரீஜா கையில் இருந்த தாலி கீழே விழ ஸ்ரீஜா கடுப்பாகிறாள், மேலும் வர்ஷினியை அடிக்க கை ஒங்க இசை கையை பிடித்து அடிக்கிற வேலையெல்லாம் வசிக்காத என்று கோபப்படுகிறாள். அதன் பிறகு சுபத்ரா கோவிலுக்கு சென்று ஜோசியரை சந்திக்கிறாள், என் பசங்களுக்கு கல்யாணம் வச்சி இருக்கேன். நீங்க வீட்டிற்கு வரணும் என்று சொல்லி கூப்பிட அவரும் வருவதாக வாக்கு கொடுக்கிறார்.

தொடர்ந்து ஜோசியர் வீட்டிற்கு வருகிறார், ஸ்ரீஜா - விஷால் மற்றும் வர்ஷினி - ராகவ் ஆகியோரின் கல்யாண பத்திரிக்கையை கொடுத்து ஆசிர்வாதம் செய்ய சொல்கின்றனர். அப்போது இசை வீட்டிற்குள் நுழைய ஜோசியருக்கு விஷாலுக்கும் இசைக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்பது போல் தோன்ற ஏதோ நடந்திருக்கு.. என்னாச்சு என்று விசாரிக்க நடந்ததை சொல்கின்றனர். பிறகு ஜோசியர் முதலில் ஸ்ரீஜா விஷால் திருமணத்தை நடத்த சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X