ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 30ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அஞ்சலி மகேஷை சந்திக்க வந்த நிலையில் இன்று நடப்பதை பார்க்கலாம்.அதாவது மகேஷ் நான் இப்போ உன்ன மாதிரி கிடையாது மாறிட்டேன் என்று சொல்ல அஞ்சலி அதை நம்ப மறுத்து பொருட்களை கலைத்து போட ஒரு கட்டத்தில் மகேஷ் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்தையும் எடுத்து சரி செய்து வீட்டை மாப் போட்டு கிளீன் செய்ய கை தட்டும் அஞ்சலி நீ மாறவே மாட்டேன் எப்பவும் இப்படித்தான் இருப்பேன் உன்னுடைய கேரக்டர் அதுதான் என்று சொல்லி கையெழுத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப அவளது கையில் அப்பா சிவராமனின் காப்பு கிடைக்கிறது.

இதையடுத்து வீட்டுக்கு வந்த அஞ்சலி அப்பா பாடி கிடந்த இடத்தில் இருந்து போலீஸ் கொடுத்த பொருட்களை எடுத்து பார்க்க அதில் காப்பு மட்டும் இல்லை என்பது தெரிய வருகிறது. இதைப் பார்த்த அஞ்சலி சந்தேகம் அடைய அங்கு வந்த லட்சுமி காப்பை பார்த்து இது அப்பாவிற்கு நான் வாங்கி கொடுத்த காப்பு என்று சொல்கிறாள். இதைத்தொடர்ந்து அஞ்சலி அப்பா எங்க உயிரோடு தான் இருக்கார்னு தோணுது என்று சொல்லி இன்சூரன்ஸ் ஆபீஸ்க்கு கிளம்பி வருகிறாள். அங்கே அப்பா கேஸ் குறித்த தகவல்களை விசாரிக்க அந்த மேனேஜர் ஒரு நிமிஷம் என்று சொல்லி மகேஷ்க்கு போன் செய்து அஞ்சலி வந்திருக்கும் விஷயத்தை சொல்ல மகேஷ் அஞ்சலிக்கு எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது நிறைய பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறான்.

இதனால் அந்த மேனேஜர் அஞ்சலியுடன் எந்த தகவலும் கொடுக்கக் கூடாதுன்னு உயர் அதிகாரி சொல்லிட்டாரு என்று சொல்லி சமாளிக்க அஞ்சலி லஞ்சம் கொடுப்பது போல பணத்தை கொடுத்து அவனை மடக்கி போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என மிரட்ட அவன் பயந்து போய் தகவல்களை கொடுப்பதாக ஒப்புக் கொள்கிறான். அஞ்சலியை ஓரிடத்தில் காத்திருக்க சொல்லி அந்த மேனேஜர் டாக்குமென்ட்களுடன் வர மகேஷ் அடியார்களை அனுப்பி அந்த மேனேஜரை சொல்ல சொல்கிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna

அண்ணா: பாக்கியம் வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி எங்கடி போன என்று சத்தம் போட அண்ணா வீட்டிற்கு போயிட்டு வரேன் என்று பதிலடி கொடுக்கிறாள். அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக பாக்கியம் நான் என் அண்ணன் வீட்டிற்கே போறேன் என்று கோபித்து கொண்டு கிளம்புகிறாள். அடுத்து சண்முகம் சனியனை சந்தித்து கூடிய சீக்கிரம் உன்னை வெளியே எடுக்கிறேன். அந்த சண்முகத்தை பழி வாங்க நான் வேற திட்டம் வச்சிருக்கேன் என்று சொல்கிறாள். பிறகு இறந்து போன பாண்டியம்மாவின் மகள் வேதவள்ளி சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர அவர் உங்க அம்மாவை கொன்னது சண்முகம் தான் என்று ஏற்றி விட வேதவள்ளி அந்த சண்முகத்தை பழி வாங்காமல் விட மாட்டேன் என்று சபதம் எடுக்கிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna

பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா திட்டமிட்டு வர்ஷினியை கடத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம். வர்ஷினி கடத்தி ஒரு குடோனுக்குள் அடைக்கின்றனர். மறுபக்கம் விஷால் குடிப்பதை தூங்கி எழுந்து கொள்ள ரூமில் இசை இருப்பதை பார்த்து கடுப்பாகி வெளியே வருகிறான். பிறகு வர்ஷினி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்கு பக்கத்தில் இருக்கும் தனது நண்பனின் ரூமுக்கு வருகிறான். அங்கே வந்து குடிக்க போவதாக சொல்லி தண்ணீர் கேட்க பக்கத்து ரூமின் கதவை தட்டி தண்ணீர் கேட்கின்றனர். விஷாலின் குரலை கேட்டு மயக்கத்தில் இருக்கும் வர்ஷினி கண்திறக்க அதற்குள் ரவுடிகள் மீண்டும் மயக்க மருந்து அடித்து மயங்க வைக்கின்றனர். ஸ்ரீஜாவின் அப்பா வர்ஷினி தற்கொலை செய்து கொண்டது போல சட்டப் செய்து அவளை கொல்ல சொல்கிறார். மறுபக்கம் வீட்டில் வர்ஷினி இல்லை என்ற விஷயம் தெரிய வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X