ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 31ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் மகேஷ் நான் இப்போ உன்ன மாதிரி கிடையாது மாறிட்டேன் என்று சொல்ல அஞ்சலி அதை நம்ப மறுத்து பொருட்களை கலைத்து போட ஒரு கட்டத்தில் மகேஷ் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்தையும் எடுத்து சரி செய்து வீட்டை மாப் போட்டு கிளீன் செய்ய கை தட்டும் அஞ்சலி நீ மாறவே மாட்டேன் எப்பவும் இப்படித்தான் இருப்பேன் உன்னுடைய கேரக்டர் அதுதான் என்று சொல்லி கையெழுத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப அவளது கையில் அப்பா சிவராமனின் காப்பு கிடைக்கிறது. இதையடுத்து வீட்டுக்கு வந்த அஞ்சலி அப்பா பாடி கிடந்த இடத்தில் இருந்து போலீஸ் கொடுத்த பொருட்களை எடுத்து பார்க்க அதில் காப்பு மட்டும் இல்லை என்பது தெரிய வருகிறது. இதைப் பார்த்த அஞ்சலி சந்தேகம் அடைய அங்கு வந்த லட்சுமி காப்பை பார்த்து இது அப்பாவிற்கு நான் வாங்கி கொடுத்த காப்பு என்று சொல்கிறாள்.

இதைத்தொடர்ந்து அஞ்சலி அப்பா எங்க உயிரோடு தான் இருக்கார்னு தோணுது என்று சொல்லி இன்சூரன்ஸ் ஆபீஸ்க்கு கிளம்பி வருகிறாள். அங்கே அப்பா கேஸ் குறித்த தகவல்களை விசாரிக்க அந்த மேனேஜர் ஒரு நிமிஷம் என்று சொல்லி மகேஷ்க்கு போன் செய்து அஞ்சலி வந்திருக்கும் விஷயத்தை சொல்ல மகேஷ் அஞ்சலிக்கு எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது நிறைய பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறான். இதனால் அந்த மேனேஜர் அஞ்சலியுடன் எந்த தகவலும் கொடுக்கக் கூடாதுன்னு உயர் அதிகாரி சொல்லிட்டாரு என்று சொல்லி சமாளிக்க அஞ்சலி லஞ்சம் கொடுப்பது போல பணத்தை கொடுத்து அவனை மடக்கி போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என மிரட்ட அவன் பயந்து போய் தகவல்களை கொடுப்பதாக ஒப்புக் கொள்கிறான். அஞ்சலியை ஓரிடத்தில் காத்திருக்க சொல்லி அந்த மேனேஜர் டாக்குமென்ட்களுடன் வர மகேஷ் அடியார்களை அனுப்பி அந்த மேனேஜரை கொல்ல சொல்கிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: இன்றைய எபிசோடில் சண்முகம் வீட்டிற்கு வரும் வேதவல்லி உன்னை பழிவாங்காமல் விட மாட்டேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி இவளை வச்சு உன் குடும்பத்தை அழிக்கிறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இதையடுத்து வேதவல்லி வீட்டிற்கு வர பாக்கியம் அவளை உள்ளே வர கூடாது என்று சொல்ல இது என் அம்மா பொறந்த வீடு, அவங்களுக்கும் இந்த வீட்டில் பங்கு இருக்கு என்று சொல்லி வீட்டிற்குள் நுழைகிறாள்.

அடுத்து ரத்னாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர அவள் கர்ப்பம் என்பது தெரிய வந்து அனைவரும் சந்தோசம் அடைகின்றனர். பரணி எனக்கும் அம்மாவாகனும் என்று தனது ஆசையை வெளிப்படுத்த சண்முகம் கூடிய சீக்கிரம் நடக்கும் என்று ஆறுதல் சொல்கிறான். அடுத்து ஸ்கூலில் சிகெரெட் பிடித்து மாட்டிய மாணவனின் பெற்றோர் என் பையன் பண்ண தப்புக்கு எங்களை தனியாக கூப்பிட்டு பேசி இருக்கலாம், ஆனால் எல்லார் முன்னாடியும் ரத்னா அவமானப்படுத்தி விட்டதாக சொல்ல சௌந்தரபாண்டி மற்றும் வேதவல்லி ஆகியோர் இதை நாங்க பார்த்துகிறோம் என்று சொல்கின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:
பாரிஜாதம்: இன்றைய சீரியலில், வர்ஷினி கடத்தப்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். வீட்டில் வர்ஷினி இல்லை என்ற விஷயம் தெரிய வந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ருக்குமணி வர்ஷினி லெட்டர் எழுதிவிட்டு சென்றிருப்பதாக சொல்லி ஒரு லெட்டரை கொண்டு வந்து கொடுக்க அது வர்ஷினியின் கையெழுத்து இல்லை என இசை நிரூபிக்கிறாள். இதனால் வர்ஷினி கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழ பக்கத்து வீட்டு சிசிடிவி கேமரா காட்சிகளை பார்க்கும்போது வர்ஷினி கடத்தப்பட்டது தெரிய வருகிறது. பிறகு இசை மற்றும் ராகவன் என இருவரும் வர்ஷினியை தேடும் வேலையில் இறங்குகின்றனர். மறுபக்கம் வர்ஷினியை ஐஸ் கட்டி இது நிற்க வைத்து கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி தற்கொலை செய்து கொள்வது போல ஏற்பாடு செய்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X