ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 3ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் முருகன் சிறைக்குள் இருக்கும் விஷயம் தெரிந்த ரேவதி, வெற்றி, துளசியை அழைத்துக் கொண்டு சிறைக்கு செல்கிறாள்.ரேவதி எதுக்காக இப்படி பண்ணீங்க? யாருக்காக பழியை ஏத்துக்கிட்டீங்க என்று கேட்க முருகன் பதில் சொல்ல மறுக்கிறான். பிறகு அங்கு வந்த வெற்றி, துளசியும் இது பற்றி கேட்க அப்போதும் ஒருவன் அமைதியாகவே இருக்கிறான். ரேவதி வீட்டுக்கு வர, லட்சுமி, பார்ட்டி ஆகியோர் முருகன் குடும்பத்துக்காக வெளியூருக்கு வேலைக்கு போய் இருக்கான் என்று பெருமையாக பேச ரேவதி கண்கலங்கிய அழ என்னாச்சு என்று கேட்க முருகன் ஜெயிலில் இருக்கும் விஷயத்தை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அடுத்ததாக வெற்றியும் முருகன் போட்டோவை அனுப்பி விசாரித்த நபர் ஈஸ்வரமூர்த்தி சந்தித்து வெற்றி முருகன் குறித்து விசாரித்த விஷயத்தை சொல்கிறார். இதனால் ஈஸ்வரமூர்த்தி இதுக்காகத்தான் அந்த முருகனை கொன்னுடலாம்னு சொன்ன.. இப்ப கூட ஒன்னும் கெட்டுப்போல ஜெயில்ல வச்சு போட்டு தள்ளிடலாம் என்று சொல்ல கதிர் வேண்டாம் என்று தடுக்கிறான். அதே சமயத்தில் அங்கு வந்த அபிராமி என்னாச்சு என்ன விஷயம் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க ஈஸ்வரமூர்த்தி சமாளித்து அபிராமி திட்டி வீட்டுக்குள் அனுப்புகிறார். இந்த விஷயம் மட்டும் துளசிக்கு தெரிஞ்சது நோண்டி எடுத்து உண்மையை கண்டுபிடித்து விடுவா இன்று ஈஸ்வரமூர்த்தி கோபபப்படுகிறார். அடுத்ததாக ஒருவனை கோர்ட்டுக்கு அழைத்து வர அஞ்சலி எதுக்காக இப்படி பழியை ஏத்துக்கிட்ட என்று கேட்க முருகன் அமைதியாக சென்று விடுகிறான். பிறகு நீதிபதி நீங்கதான் ஆக்சிடென்ட் பண்ணிங்களா முருகன் ஆமாம் என்று ஒப்புக்கொள்ள துளசி பொய் சொல்லாத அண்ணா என்று கத்துகிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா : இன்றைய எபிசோடில், இசக்கி குழந்தையுடன் செக்கப்பிற்கு ஹாஸ்பிடல் வந்திருக்க அங்கு சனியனின் மனைவி பஞ்சுவும் வருகிறாள். இசக்கியை பார்த்த அவள் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் நீ உன் அம்மா வீட்டிலேயே இருக்க போற என்று கேட்கிறாள். இசக்கி அவங்க வந்து கூப்பிடனும் என் அண்ணன் அனுப்பனும் அப்போ தான் போக முடியும் என்று சொல்ல பஞ்சு இப்படியே இருந்தா உன் முடியெல்லாம் நரைத்த பிறகு தான் போகணும் என்று நக்கல் அடிக்க இசக்கி எல்லாம் எங்களுக்கு தெரியும் உங்க வேலையை பாருங்க என்று திட்டி அனுப்புகிறாள்.

அடுத்து வீட்டிற்கு வந்த இசக்கி ஹாஸ்பிடலில் நடந்ததை சொல்ல வைகுண்டம் இங்கேயே இருந்தா அப்படி தான் பேசுவாங்க என்று சொல்கிறார். பரணி நான் போய் உன் புருஷன் கிட்ட பேசுறேன். உங்க அண்ணன் கிட்ட நான் பேசுகிறேன் என்று சொல்லி கிளம்புகிறாள். பாக்கியம் மற்றும் முத்துபாண்டியை சந்தித்து பேச இருவரும் இசக்கியை அழைத்து செல்ல கிளம்ப சௌந்தரபாண்டி தடுத்து நிறுத்தி என் அக்காவை கொன்னது அந்த சண்முகம் தான் என்று கோபப்படுகிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில் சாமியார் விஷாலுக்கு தான் முதலில் திருமணம் செய்ய வேண்டும் என சொல்லிவிட்டு, சாமியார் இசையை கூப்பிட்டு ஆசிர்வாதம் செய்ய சுபத்ரா சந்தோஷமடைகிறாள். அடுத்து இசை, வர்ஷினியை கூப்பிட்டு இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும், நீ தான் கல்யாண பொண்ணு என்று சொல்ல வர்ஷினியும் உனக்கும் கல்யாணம் நடக்கும் என்று சொல்கிறாள்.

அடுத்து மீண்டும் ரம்யாவை பயமுறுத்தி உண்மையை சொல்ல வைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றனர். மறுபக்கம் விஷால், ஸ்ரீஜாவை பார்க்க அவளது ரூம்க்கு செல்ல கோவிலுக்கு சென்றிருப்பதாக சொல்கின்றனர். ஆனால் ஸ்ரீஜா தனது அப்பாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். அவரது அப்பா நீ, அந்த குடும்பத்துக்கு மருமகளா போனால் தான் உன் அம்மாவை கொன்னவங்கள பழி தீர்க்க முடியும் என்று சொல்கிறார். அடுத்து விஷால் இசையை பார்க்க இசை பீல் ஆக விஷால் அவளிடம் பேச வருகிறான். அப்போது அங்கு வரும் ஸ்ரீஜா பேச விடாமல் தடுத்து விடுகிறாள்.
அடுத்து எல்லாரும் வீட்டில் இருந்து மண்டபத்திற்கு கிளம்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X