ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 5ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் முருகனை கோர்ட்டில் நிறுத்தி விசாரணை தொடங்கிய நிலையில் இன்று, அதாவது ட்ரான்ஸ்லேட்டர் முருகன் சொல்வதை அப்படியே மாற்றி சொல்ல அஞ்சலி எங்க அண்ணா அதை பண்ணவே இல்ல என்று சொல்கிறாள். பிறகு அக்கா நான் தான் வாதாட முடியல நீ வாதாடு உனக்கு உதவியா நானும் மாமாவும் இருக்கும் என்று சொல்ல துளசியும் வாதாட ஒப்புக் கொள்கிறாள். இந்த விஷயம் அறியும் மீனாட்சி உடனடியாக மோனிகாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல முருகன் இந்த ஆக்சிடென்ட் பண்ணவே இல்லையே அவர் கல்யாண மண்டபத்துல தானே இருந்தாரு என்று சொல்ல நீயே அவரை ஜாமீன் வெளியே எடுப்ப போல என்று மீனாட்சி திட்டுகிறாள்.
உன் அண்ணனோட மரணத்துக்கு காரணமான அந்த துளசியை நீ பழிவாங்க வேண்டாமா? உங்க அண்ணன் குழந்தையை பிடிச்ச அவள சும்மா விட போறியா என்று ஏற்றுவிட்டு ஒரு திட்டத்தை ரகசியமாக சொல்கிறாள். இங்கே ஆக்சிடென்ட் நடந்த போது முருகன் மண்டபத்தில் இருந்த வீடியோ ஆதாரத்தை சமர்ப்பிக்கலாம் என்று அஞ்சலி ஐடியா கொடுக்க வெற்றி துளசி ஸ்டூடியோவுக்கு வந்து விசாரிக்கின்றனர். அது ரொம்ப நாள் ஆகிவிட்டதால் ஃபுட்டேஜ் இருக்கா இல்லையா என்று தெரியவில்லை செக் பண்ணி சொல்வதாக ஸ்டுடியோ கடைக்காரர் சொல்கிறார்.
பிறகு கோர்ட்டுக்கு வந்த துளசி முருகனுக்கு ஆதரவாக வாதாட ஒப்புக்கொண்டு அவர் மண்டபத்திலிருந்து அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அதை சமர்ப்பிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என அனுமதி கேட்கிறாள். இந்த சமயத்தில் மோனிகா ஸ்ரீகாந்த் மரணத்திற்கு துளசியும் அவளது குடும்பம் தான் காரணம் என வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல் கிடைக்கிறது.

அண்ணா: நேற்றைய எபிசோடில் சண்முகம் சௌந்தரபாண்டியிடம் சவால் விட்டு சென்ற நிலையில் இன்று, சனியன் மற்றும் சௌந்தரபாண்டி பேசிக் கொண்டிருக்க பாக்கியம் திடீரென பேய் வந்து இறங்கியது போல நான் பாண்டியம்மா வந்து இருக்கேன் உன்னை சும்மா விடமாட்டேன் என்று நடிக்கிறாள். சனியன் ஐயா என்ன இதெல்லாம் என்று பயப்பட சௌந்தரபாண்டி அதெல்லாம் ஒன்னும் இல்லடா என்று சொல்கிறார். பிறகு நைட்டு நேரத்தில் தனியாக எழுந்து தண்ணீர் குடிக்க போக அப்போது பாண்டியம்மா ஆவி வந்து அவரை மிரட்ட பயந்து போகிறார்.
இவர் சத்தம் போட்டதில் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கூடி விடுகின்றனர். ஆனால் சௌந்தரபாண்டி கண்ணுக்கு மட்டும் பாண்டியம்மா ஆவி தெரிய அவர் பதற வீட்டில் உள்ளவர்கள் மனப்பிராந்தி என சமாதானம் செய்கின்றனர். பிறகு சனியன் இது குறித்து பேச சௌந்தரபாண்டி மேலும் பயந்து போகிறார்.
பாரிஜாதம்: ஸ்ரீஜா எப்படியாவது இசையை மண்டபத்தில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என திட்டம் போடுகிறாள். மறுபக்கம் ஸ்ரீஜாவின் அத்தை மாமாவாக நடிக்க வந்தவர்கள் இதை கொண்டு வா அதை கொண்டு வா என அதிகாரம் செய்கின்றனர். இதைப் பார்த்த ஒருவர் இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சந்தேகம் கொண்டு அவனிடம் சத்தம் போடுகிறார். பிறகு இசை அவர்கிட்ட எதுக்கு சத்தம் போட்டீங்க என்று விசாரிக்க அவன் நடிக்க வந்தவன் என்ற உண்மையை உடைக்கிறார். என் பொண்டாட்டி பேர் பரமேஸ்வரி என்று சொல்ல ஸ்ரீஜாவின் திட்டத்தை அறிகிறாள் இசை. அதன் பிறகு இசை பரமேஸ்வரி சந்தித்து அவளை மண்டபத்திற்கு அழைத்து வருகிறாள். பரமேஸ்வரி வருகையால் அடுத்து நடக்கப் போவது என்ன? இசை ஸ்ரீஜாவின் முகத்திரையை கிழிப்பாளா? என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை பார்க்கவும்.


Click it and Unblock the Notifications











