ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 8ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் வெற்றிக்கு தான் செய்த ஆக்சிடென்ட்டுக்கு முருகன் பழியை ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கோர்ட்டில் இந்த விபத்தை முருகன் செய்யவில்லை என்ற வீடியோ ஆதாரத்தை கொடுக்கிறாள். இதையடுத்து, வெற்றி கோர்ட்டு கூண்டில் ஏறி ஆக்சிடென்ட் செய்தது நான் தான்.. ஸ்ரீகாந்த் மரணத்திற்கு நான் தான் காரணம் என்று உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு வெற்றி குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தினால் அவரை கைது செய்ய சொல்லி நீதிமன்றம் உத்தரவிட முருகன் ரிலீஸ் செய்யப்படுகிறார். இதையடுத்து வெற்றி கைதான விஷயம் வீட்டுக்கு தெரியாத அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். வெற்றியின் அம்மா அபிராமி அதிர்ச்சியில் மயங்கி விழுகிறார்.

அண்ணா: சௌந்தரபாண்டி மற்றும் சனியன் என இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது பாண்டியம்மாவின் குரலையும் உருவத்தையும் பார்த்து அலறி அடித்து எழுந்து கொள்கின்றனர். இவர்கள் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் எல்லோருக்கும் கூடி விடுகின்றனர். அதன் பிறகு பாண்டியம்மாவின் ஆத்மா வந்ததாக சொல்லி பயத்தின் பூஜை அறைக்குச் சென்று சாமி கும்பிட்டு விபூதி அடித்துக் கொண்டு வருகின்றனர். பிறகு பாக்கியம் டி போட்டு கொடுக்க மீண்டும் பாண்டியம்மாவின் குரலையும் உருவத்தையும் பார்த்த டீடுயை மேலே கொட்டிக் கொள்கிறார். பிறகு பாக்கியம், பரணிக்கு தகவல் கொடுக்கும் சண்முகம், பரணி இருவரும் கிளம்பி வருகின்றனர். சிவபாலன் சண்முகத்தை தனியாக அழைத்து ஏ.ஐ மூலமாக அத்தையின் குரலை உருவத்தையும் வரவைத்து அப்பாவை பயம் காட்டியது நான்தான் என்ற உண்மையை சொல்கிறான்.
பாரிஜாதம்: ஸ்ரீஜாவின் அத்தை மாமாவாக நடிக்க வந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்ட இசை. நடிக்க வந்தவரின் உண்மையான பொண்டாடி பரமேஸ்வரி சந்தித்து அவளை மண்டபத்திற்கு அழைத்து வருகிறாள். பரமேஸ்வரியை பார்த்த அந்த நபர் பயந்து ஓடுகிறார். பின் அனைவர் முன்பும் அந்த நபரை அடித்து, இது யாருடா உன் புதுபொண்டாட்டி என்று சத்தம் போட, அது ஸ்ரீஜாவின் உண்மையான பெற்றோர் இல்லை என்ற உண்மை தெரியவருகிறது. பின் ஸ்ரீஜா, அதற்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்ல சுபத்ரா, அவளை மன்னித்து விடுகிறாள்.
பின் ஸ்ரீஜா அப்பாவுக்கு போன் செய்து நடந்ததை சொல்ல அவர் நான் வந்தா பிரச்சனை ஆயிடும் என வர மறுக்கிறார். பிறகு ஸ்ரீஜா வேறொருவரை அப்பாவாக நடிக்க வைத்து சமாளிக்கிறாள். பிறகு நடிகை நளினி மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக மண்டபத்திற்கு வருகிறார். ஸ்ரீஜா நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. நடந்த விஷயத்தை அறிந்து இசை தான் சரியான மருமகள் என்ற முடிவுக்கு வருகிறார். அதை சுபத்ராவிடமும் தெரியப்படுத்துகிறாள். அதன் பிறகு வாங்கி வந்த கிஃப்ட்டையும் இசைக்கு கொடுத்து விட்டு செல்ல ஸ்ரீஜா கடுப்பாகிறாள்.


Click it and Unblock the Notifications











