ஜீ தமிழ் சீரியல்கள் டிசம்பர் 9ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: வெற்றி ஜெயிலுக்கு போன விஷயம் அறிந்து மயங்கி விழுகிறாள் அவனது அம்மா அபிராமி, அடுத்து துளசி மற்றும் தியா வீட்டிற்கு வருகின்றனர். ஈஸ்வரமூர்த்தி இதுக்கு தான் பொறுமையா இருக்கேனு சொன்னேன். நான் சொல்றதை கேட்டு இருக்கலாம். இல்ல நான் பார்த்த வக்கீலையாவது வச்சி வாதாடி இருக்கலாம். இப்போ இந்த பிரச்சனை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாரு என்று சொல்கிறார். அபிராமி இனிமே நீ இந்த வீட்டில் இருக்க கூடாது. போடி வெளியே என்று சத்தம் போட ஈஸ்வரமூர்த்தி எதுக்கு அவ வெளியே போய் வரதட்சணை கேஸ் கொடுத்து அதுக்கும் ஜெயிலுக்கு போகவா என்று திட்டுகிறார். பிறகு துளசியும் தியாவும் ரூமுக்கு சென்று விடுகின்றனர்.
தியா அப்பா எங்க மா எப்போ வருவாரு என்று கேட்க துளசி நீ தூங்கு என்று சொல்ல அப்பா வராமல் தூங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள், இருவரும் பேசுவதை கேட்ட மீனாட்சி துளசி இல்லாத நேரமாக உள்ளே வந்து தியாவிடம் உங்க அப்பாவை கொன்னது வெற்றி தான், அதான் போலீஸ் கைது பண்ணிட்டாங்க. வெளியே வர 5 வருஷம் ஆகும் என்று சொல்லி விடுகிறாள். அடுத்து தியா இதுகுறித்து கேட்க துளசி குழந்தையை கட்டியணைத்து கண் கலங்குகிறாள். தொடர்ந்து மகேஷ் வெற்றியை சந்தித்து ஆக்சிடென்ட் பண்ணிட்டு அந்த பொண்ணையே திருட்டு தனமாக கல்யாணமும் பண்ணி இருக்கீங்க, 5 வருஷம் கழிச்சி பாக்கலாம் என்று நக்கல் அடிக்கிறான்.

அண்ணா: சிவபாலன் பாண்டியம்மா உருவத்தை வைத்து சௌந்தரபாண்டியை பயமுத்துகிறான். இதுகுறித்து சிவபாலன்,சண்முகத்திடம் ஹாலோகிராம் குறித்துவிளக்கிக்கொண்டு இருக்கிறான். இருவரும் பேசி கொண்டிருப்பதை பார்த்த பரணி என்னடா விஷயம் என்று கேட்க சண்முகம் ஒன்னும் இல்ல, டைம் ஆச்சு வா போலாம் என்று பரணியை அழைத்து கொண்டு கிளம்புகிறான். அடுத்து வீராவும் சிவபாலனும் ஹாலோகிராமில் வீடியோ பார்த்து கொண்டிருக்க சௌந்தரபாண்டி சனியன் பாண்டியம்மா குரல் கேட்டு பயந்து போய் சாமியார் ஒருவரை சந்திக்கின்றனர். அவர் வீட்டிற்கு வந்து பூஜை செய்வதாக சொல்கிறார். இங்கே சண்முகம் பரணியும் பேசி கொண்டிருக்க இருவரும் அவரவர்களின் ஆசை குறித்து ஒரு பேப்பரில் எழுத சண்முகம் பரணிக்காக மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல் கட்டணும் என்று ஆசைப்படுவதாக எழுத பரணி சண்முகத்துக்கு சூப்பர் மார்கெட் வைத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துகிறாள்.



Click it and Unblock the Notifications











