ஸ்ரீ சங்கரா டிவியின் ‘ஸ்வீட் தீபாவளி’
ஸ்ரீ சங்கரா டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. ஸ்ரீசங்கரா டி.வியில் தீபாவளியை முன்னிட்டு 'ஸ்வீட் தீபாவளி'சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான இனிப்பு வகைகளை தீபாவளி தினத்தில் நமக்கு செய்து காட்டப்போகிறார்கள்.
தொடர்ந்து புலவர் மா.ராமலிங்கம் தலைமையில் 'வாழ்க்கை பண்புகளை வளர்ப்பது, தெய்வீகக் கதைகளா, சமூக கதைகளா' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறுகிறது '

அந்தியாக்ஷரி
இது ஸ்லோகத்தின் அந்தியாக்ஷரி.முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மாணவர்களின் அறிவையும்,ஆன்மீகத்தையும் ஓருங்கே பரிமளிக்க செய்யும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் ஒருபுதிய நிகழ்ச்சி.

சிறப்பு பட்டிமன்றம்
புலவர்: மா.இராமலிங்கம் தலைமையில் ,வாழ்க்கை பண்புகளை வளர்ப்பது , தெய்வீகக் கதைகளே,சமூக கதைகளே தெய்வீகக் கதைகள் தலைப்பில்; கவிஞர் திரு:த.சதாசிவம், திருமதி : சந்திரா குணசேகரன்
சமூக கதைகள் தலைப்பில்; திரு.சொக்கலிங்கம் பேராசிரியை: கௌசல்யா. விறு விறு விவாகத்துடன் மற்றும் சிறப்பான கருத்துகளுடனும் நகைச்சுவை உணர்வுடன் ஸ்வாரஸ்யமான பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது ....

ஸ்வீட் தீபாவளி
தீபாவளிக்கு வித விதமா பலகாரம் செய்தாலும், ரேணுகாதேவி அவர்கள் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான இனிப்பு வகைகளை நமக்கு செய்து காட்டபோகிறார்கள்.

தீபாவளி லேகியம்
உளுத்தம்பருப்பு லட்டு,சாமை அரிசி ஹல்வா, தீபாவளி லேகியம்..போன்றவைகளை செய்யும் முறைகளை ஒளிபரப்புகின்றனர்.. இதோடு இன்னும் பல ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சிகள் ஸ்ரீசங்கரா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











