»   »  மூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்

மூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாசமா போறவளே... மூதேவி... நல்ல சாவே வராது... இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? இது சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலின் வசனங்கள்.

தெய்வமகள் தொடர் ஆரம்பத்தில் என்னவோ ஆஹா... ஓஹோ என்றுதான் போனது. கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக மாறி வருகிறது. 1400 எபிசோடுகளை எட்டப்போகும் தெய்வமகள் தொடரைப் பார்த்து ரசிகர்கள் திட்டி குவிக்கின்றனர்.

மொக்கை சீரியலாக இருக்கே... சீக்கிரம் முடிங்களேன் என்று கூறத் தொடங்கிவிட்டனர். காரணம் விநோதினியின் நாராச வசனங்கள்தான்.

காயத்திரியின் கொடூர முகம்

காயத்திரியின் கொடூர முகம்

தன்னை கொல்ல திட்டமிட்ட பிரகாஷை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல திட்டம் போடும் காயத்ரி, ஐபிஎஸ் அதிகாரி மந்த்ரா போல மாறு வேடத்தில் நடித்து வருகிறாள். அதை யாருமே கண்டு பிடிக்கவில்லை என்பதுதான் காமெடி.

மூதேவி மூதேவி

மூதேவி மூதேவி

காயத்திரியின் சகோதரி விநோதினி பேசும் வசனங்கள் எல்லாமே தரை லோக்கல்தான். விளக்கு வைக்கிற நேரத்தில எந்தெந்த வார்த்தைகளை கேட்கக்கூடாதோ அத்தனையும் பேசுவது விநோதினி ஸ்டைல். அதிலும் நாசமா போறவனே... என்ற வசனம் அடிக்கடி வாயில் வரும். விநோதினியை மூதேவி என்று திட்டுவது அவளது கணவன் ஸ்டைல். காயத்ரியை தொடப்பக்கட்ட என்று திட்டுவது குமாரின் ஸ்டைல் இதைப்பார்த்து ரசிகர்கள் திட்டுகின்றனர்.

ரொம்ப திட்டாதீங்க

சீரியல் படப்பிடிப்பிற்கு இடையே சீரியல் நாயகி சத்யா, வில்லி காயத்ரி, குமார் இணைந்து ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவை போஸ்ட் செய்துள்ளனர். நாங்க ரொம்ப நல்லவங்கள்... நண்பர்கள். யாரும் திட்டி கமெண்ட் பண்ணாதீங்க என்று கேட்டுள்ளனர்.

நான் தமிழச்சி ஆயிட்டேன்

நான் தமிழச்சி ஆயிட்டேன்

எனக்கு தெலுங்கு மறந்து போச்சு.... நான் தமிழச்சி ஆயிட்டேன் என்று கூறியுள்ளார் காயத்ரி. எனக்கு கன்னடம் நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார் காயத்ரி. ஆனாலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை மொக்க சீரியல் என்று திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

முட்டாள்களா?

காயத்ரி, மந்த்ரா என இரு வேடங்களில் நடிக்கும் அண்ணியாரை ஒரு வாட்சை வைத்து கண்டுபிடிக்கிறார்களாம் அடியாட்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரு புத்திசாலித்தனம் கூட காவல்துறையினருக்கோ, மந்த்ராவின் கணவர் என்று கூறும் ஐஏஎஸ் அதிகாரிக்கோ இருக்காதா என்று கேட்கின்றனர் பார்வையாளர்கள்.

கணவனை காட்டிக்கொடுத்த சத்யா

நீதி நேர்மை என்று பேசிக்கொண்டிருக்கும் சத்யா, தனது கணவர் பிரகாஷ் சம்பத்தப்பட்ட வீடியோவை மந்த்ராவாக நடிக்கும் காயத்ரியிடம் கொடுக்கிறார். இதனையடுத்தே சத்யாவிற்கு இப்போது நிறைய திட்டுக்கள் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கின்றன.

English summary
Deiva Magal serial is getting worst day by day. Its dialogues

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil