சத்யா கல்யாணம் நின்னு போச்சே?: தெய்வமகள் திடீர் திருப்பங்கள்

By Mayura Akilan

சன் டிவியின் தெய்வமகள் தொடரில் எதிர்பார்த்தது போலவே சத்யாவின் திருமணம் நின்று போனது. ஆனால் சத்யாவின் அப்பா சுந்தரத்தின் மரணம் எதிர்பாராதது என்கின்றனர் ரசிகர்கள்.

நகை, பணத்திற்காக ஒருவேளை திருமணம் நின்று போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட கார்த்திக் - சத்யா திருமணம் திடீரென்று சகுனத்தடையினால் நின்று போனது.

மகளின் திருமணம் நின்று போன துக்கத்தில் தந்தை சுந்தரத்தின் மூச்சும் நின்றுபோனது. கல்யாண சந்தோசம் இருக்க வேண்டிய வீடு கடைசியில் துக்க வீடாக காட்சியளிக்கிறது.

கார்த்திக் – சத்யா

கார்த்திக் – சத்யா

பூங்குடி கிராமத்தில் பெண் பார்க்க வந்து கடைசியில் பெயர் குழப்பத்தில் சத்ய கலாவிற்கு பதிலாக சத்ய பிரியாவை பெண் பார்த்து செல்கிறான் கதாநாயகன் கார்த்திக்.

கோடிக்கணக்கில் வரதட்சணை

கோடிக்கணக்கில் வரதட்சணை

கார்த்திக்கும் சத்ய பிரியாவும் ஒருவரை ஒருவர் விரும்பவே பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்கின்றனர் பெற்றோர். கடைசியில் கோடிக்கணக்கில் வரதட்சணை கேட்கிறார் கார்த்திக் அம்மா அனுராதா.

திருமணம் நடக்க கூடாது

திருமணம் நடக்க கூடாது

இந்த திருமணத்தை எப்படியாவது நடக்க விடக்கூடாது என்று ஜே.கே திட்டமிட்டு சுந்தரத்தை கடனாளியாக்குகிறான். ஆனாலும் திருமண வேலைகள் நிற்கவில்லை.

சகுனத்தடை…

சகுனத்தடை…

கடைசியில் தாலி கட்டும் நேரத்தில் மாங்கல்யத்தில் நெருப்பில் விழுமாறு சதி செய்கின்றனர் ஜே.கே. ஏற்பாடு செய்த பெண்கள் கடைசியில் திருமணம் நின்று போகிறது.

நடக்கவே நடக்காது

நடக்கவே நடக்காது

எத்தனையோ சகுனத்தடைகளை தாண்டி நடக்க இருந்த திருமணம் நின்று போகவே இடிந்து போன சுந்தரம் தனியாக வீட்டுக்கு வருகிறார். கடைசியில் சவாலில் தோற்றுவிட்டோமோ என்ற கவலையே அவரை கொன்று விடுகிறது.

இனி என்ன நடக்கும்?

இனி என்ன நடக்கும்?

அம்மாவின் பேச்சைக் கேட்டு எழுந்த மாப்பிள்ளை இனி தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்த சத்யா அப்பாவிற்கு சமாதானம் சொல்கிறாள். அருகில் சென்ற பார்த்த பின்னர்தான் அப்பா இறந்து போன விசயம் தெரிகிறது.

மரணத்திற்கு காரணம்

மரணத்திற்கு காரணம்

திருமணத்தை மட்டும்தான் நிறுத்த வேண்டும் என்பது ஜே.கேவின் எண்ணம். ஆனால் சுந்தரத்தின் மரணம் எதிர்பாராதது. இது ஜே.கே.விற்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. பாவத்திற்கு ஆளாகிவிட்டோம் என்று ஜே.கேவை திட்டுகிறார் அவரது தயார்.

சத்யாவின் வாழ்க்கை

சத்யாவின் வாழ்க்கை

திருமணம் நின்று போனாலும் அதைப்பற்றி கவலைப்படாத சத்யா அப்பாவின் மரணத்தினால் இடிந்து போய் இருக்கிறாள். அம்மா, தங்கைகளுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்று தவிக்கும் சத்யாவின் வாழ்வில் இனி என்ன நடக்கும். சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தெய்வமகள் தொடரில் வரும் வாரங்களில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X