Arundhathi serial:தெய்வானை நான்தாண்டி அருந்ததி பார்த்துக்கோ!

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் நல்ல சக்தியான தெய்வானையும், தீய சக்தியான அருந்ததியும் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்கிறது.

தெய்வானை வாசலில் போட்ட கோலத்தின் நடுவில் வந்து நின்ற சண்முகத்தின் உடலில் இருந்த தீய சக்தி வெளியில் வருது.

தெய்வானை நான்தாண்டி அருந்ததி..நல்லா பார்த்துக்கோ. இந்த குடும்பத்தில் உள்ள ஆண்களை அழிக்காமல் விட மாட்டேன்னு சொல்லுது.

மனோ பாலா போல

மனோ பாலா போல

நடிகை கோவை சரளாவை காஞ்சனா 2 வில் வரும் போலி பேய் ஓட்டும் சாமியார் போலத்தான் காமிச்சு இருக்காங்க. உண்மையில் கோவை சரளாவை நடிக்க வைக்க லாரன்ஸ் மாஸ்டரால் மட்டுமே முடியும். கோவை சரளா கதாபாத்திரத்தின் மீது இன்னும் அதிக அக்கறை காமிக்க வேண்டும் என்பதுதான் நிஜம். இல்லாவிட்டால் ளத்தனை பெரிய நடிகையை நன்றாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட நேரிடும்.

கொடுத்த பொடி

கொடுத்த பொடி

கோவை சரளா தன் சிஷ்யனுடன் வந்து தங்கி இருப்பது தெரிந்து, தெய்வானை அவங்களை பார்க்க வர்றா. இவங்க காமெடி பண்ணிக்கிட்டு இருக்க, ஒரு பொடி டப்பாவை கொடுத்து, ராத்திரி ரங்கோலி கோலம் போட்டு, இதைத் தூவி வை. அதன் நடுவில் ஆவி புகுந்த ஆள் வந்து நிப்பாங்கன்னு சொல்லி அனுப்பறாங்க. நிஜமாவான்னு கேட்க, இந்த புள்ள எதை சொன்னாலும் நம்பும் போலிருக்கேன்னு சொல்லும் போது நமக்கே பொய்தானோன்னு தோணுது.

தெய்வானை கோலம்

தெய்வானை கோலம்

சொன்னபடி இரவு நேரத்தில் ரங்கோலி கோலத்தை போட்டுட்டு தெய்வானை காத்திருக்க, அதன் நடுவில் வந்து நின்ற சண்முகத்தின் உடம்பில் இருந்து சிவப்பு நிற புடவை உடுத்திய பெண் கோலத்தின் நடுவில் நிக்கறா . தெய்வானை பயந்து அலறி நிற்க, பார்த்துக்கோ தெய்வானை நான்தான் அருந்ததி. இந்த குடும்பத்தில் இருக்கும் அத்தனை ஆண்களையும் வேரறுக்க போறேன்னு சிரிக்குது அருந்ததி பேய்.

தெய்வானை பயந்து

தெய்வானை பயந்து

தெய்வானை தீய சக்தி.. நான்தான் அவளை நம்பிட்டேன்னு இப்போது ரஞ்சனி அம்மா வேண்டும் என்றே தீய சக்தி தெய்வானை உடம்பில்தான் உள்ளதுன்னு ஈஸ்வரி அம்மாவின் ஓரகத்தியிடம் சொல்லறாங்க. அருந்ததி உனக்கு இந்த குடும்பத்து ஆண்களை அழிக்கணும், எனக்கு அந்த 300 ஏக்கர் நிலம், முருகன் கோயில் வேணும் .அதனால்தான் உன்னோட நான் கைகோர்த்துக்கிட்டேன்னு சொல்லிக்கறாங்க. கையிலிருக்கும் காப்புக்கள் இப்போது அதன் சக்தியை இழந்துவிட்டன என்று அதையும் எல்லாரையும் கழற்றி வைக்க சொல்லிட்டாங்க ரஞ்சனி அம்மா.

தீய சக்தி தெய்வானை

தீய சக்தி தெய்வானை

ரஞ்சனி அமமா பேச்சை கேட்டுகிட்டு, ஈஸ்வரி அம்மாவின் ஓரகத்தி, நீ செய்யறதைப் பார்த்தால் தீய சக்தி உனக்குள்ளேதான் இருக்கோன்னு தோணுது. இந்த அர்த்த ராத்திரியில் யாராவது கோலம் போடுவாங்களான்னு கத்தறாங்க. தெய்வானை அழுதுகிட்டு நிற்க, சண்முகம் வந்து அவளை அழைச்சுக்கிட்டு போறான். தெய்வானையும் நம்பி போக ரூமில் போனதும் மீண்டும் அருந்ததியா மாறி, உனக்கும் எனக்கும் ஒண்ணும் பகை இல்லை. யாருக்காவது என்னை காமிக்கணும்னு நினைச்சாலும் நான் உன் கண்ணுக்கு மட்டும்தான் தெரிவேன். அவங்க கண்ணுக்கு தெரிய மாட்டேன்.பேசாம இருந்தா உன்னையும், உன் புருஷனையும் ஒண்ணும் செய்ய மாட்டேன்னு பயமுறுத்தி வைக்குது.

இனிதான் கோவை சரளா என்ன செய்வாங்கன்னு தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X