Arundhathi Serial:அருந்ததிக்கு தோல்வி தெய்வானைக்கு வெற்றி
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் ஈஸ்வரி அம்மாவே நம்பும் நம்பூதிரி ரஞ்சனி அம்மா தீய சக்திக்கு துணை போறாங்க. இதனால நேரடியா அருந்ததிக்கும், தெய்வானைக்கும் போட்டி நடக்குது.
இது தெரியாத ஈஸ்வரி அம்மா குடும்பத்தினர் இன்னமும் நம்பூதிரி அம்மாவிடமே குறி, ஆலோசனை கேட்டுக்கிட்டு இருக்காங்க.
இதை சாதகமா பயன் படுத்திகிட்டு தீய சக்தியான அருந்ததிக்கு சாதகமா பூஜை, புனஸ்காரம்னு நம்பூதிரி அம்மா செய்ய சொல்றாங்க. இது அருந்ததிக்கு சாதகமா அமைஞ்சு போகுது.

தெய்வானை அருந்ததி
அருந்ததி தெய்வானையிடம் அவளின் தெய்வ சக்தி தெரிஞ்சு, தெய்வானை உனக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லை. இந்த குடும்பத்து ஆண்கள் என்னை இந்த வீட்டில் வாழ விடலை. அதனால, இந்த குடும்பத்து ஆண்களை மட்டும் கருவறுக்க போறேன்.அவ்ளோதான்..என் வழியில் குறுக்கே வராதேன்னு சொல்றா.

அருந்ததி மட்டும்
தெய்வானையின் கண்களுக்கு மட்டும்தான் அருந்ததி தெரிவாள்.அதனால், இந்த விஷயத்தை தெய்வானையால் யாரிடமும் சொல்ல முடியலை. கோவை சரளாவை பார்த்து முருகன் வேல் ஒன்றையும் வாங்கி வைத்து இருக்கிறாள். ஆனால், கோவை சரளா செய்ய சொல்லும் ஒவ்வொரு விஷயத்திலும் தெய்வானைக்கு சக்ஸஸ் நடக்குது.

மகனை அருந்ததி
முதல் மருமகள் மூலம் பிறந்த பேரனை முதலில் கூறி வைக்கிறது அருந்ததி பேய். தூங்கிக் கொண்டு இருந்த அந்த பையனை சண்முகத்தின் உடலிலிருந்து வெளியே வந்து எழுப்பி விடுது. அவன் எழுந்து அம்மாவை எழுப்பி பசிக்குதுன்னு சொல்றான். சரி வா, பால் தரேன்னு சொல்லி அழைச்ச்ச்சுகிட்டு வர்றா.

பிள்ளையை காணோம்
பாலைக் காய்ச்சு எடுத்துக்கிட்டு திரும்பிப் பார்த்தால் பையனை காணலை.ஏற்கனவே ஒரு முறை அருந்ததியின் உருவத்தை கண்டு பயந்து போயிருக்கும் மூத்த மருமகள், பையனை கீழே தேடிகிட்டு வர்றா. பார்த்தால் பையன் தலைகீழா தொங்கிகிட்டு இருக்கான். யாராவது காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு அழறா.

முருகன் வேல் தெய்வானை
தெய்வானை ஓடி வந்து பார்க்க அருந்ததி பையனை மாடி மேலிருந்து தலை கீழாகப் பிடிச்சு இருப்பது இவளது கண்களுக்கு மட்டும் தெரியுது. காப்பாத்து தெய்வானைன்னு மூத்த மருமக கெஞ்ச. இருங்கக்கான்னு மாடியில் தன் ரூமுக்கு ஓடறா தெய்வானை.அங்கே கோவை சரளா சாமியார் கொடுத்த வேலை எடுத்துட்டு வந்து, அதை எடுத்துக்கொண்டு மாடிக்கு ஒடி, அருந்ததி முன்னால் நிற்க,அருந்ததி பையனை தெய்வானைகிட்ட குடுத்துடறா.

சக்தியை பார்த்துட்டேன்
மூத்த மருமகள் தெய்வானை உன் சக்தியை நான் நேரில் பார்த்துட்டேன் தெய்வானை. என் பிள்ளையை காப்பாத்தினத்துக்கு நன்றின்னு சொல்றா மூத்த மருமகள். இப்போ தெய்வானை ரூமுக்கு போக, மறுபடி அருந்ததி வந்து மிரட்டறா. தெய்வானை நீ முட்டாள், நீ பார்த்து ஆலோசனை கேட்கற பொம்பளை சாமியார் போலி சாமியார். உனக்குள்ள ஒரு சக்தி இருக்கு.அதுதான் அந்த பையனை காப்பாத்தி இருக்கு.

வழியில் இனிமேலும்
என் வழியில் இனிமேலும் குறுக்கிடாதே.. குறுக்கிட்டா, இந்த வீடியோவைப் பாரு.இதுல இருக்கற மாதிரி உன் பாட்டி, இஞ்சி, பச்ச மொளகாய், பூண்டு எல்லார் கதியும் பாம்பு கடிச்சு சாக வேண்டியதாகிடும்னு மிரட்டுது அருந்ததி பேய்.அ தோடு, உன் புருஷனையும் கொன்னுடுவேன்னு மிரட்டுது. என்ன செய்வது என்று தெரியாமல் நிக்கறா தெய்வானை.
ஆனால், முதல் அட்டெம்ப்டில் அருந்ததி பேய்க்கு தோல்விதான். தெய்வ சக்தியான தெய்வானைக்கே வெற்றி.


Click it and Unblock the Notifications











