பட்டென்று அறைந்த கணவன்… மூர்ச்சையான மனைவி….

By Mayura Akilan

ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் வசிக்கும் காந்தியவாதியின் மூன்றாவது மகன் குடிகாரன், கோபக்காரன், கூசாமல் லஞ்சம் வாங்குகிறான். இரண்டாவது மகனோ சோம்பேறி... போலி வேஷம் போட்டு ஏமாற்றிய குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார்.

அவருடைய மூத்த மருமகளோ வன்மம் வைத்து குடும்பத்தைக் கெடுப்பதில் கைதேர்ந்த கில்லாடி. குடும்பத்தில் தன்னுடைய கொடிதான் பறக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டாவது மருமகளை வீட்டை விட்டு துரத்திவிட்டவர். மூன்றாவது மருமகளையும் இப்போது வாழவெட்டியாக்கி விட்டார்.

என்னதான் நடந்தாலும் இந்த பிரகாஷ் இப்படி செஞ்சிருக்கக் கூடாது சத்யாவைப் போட்டு இப்படி அடிச்சிட்டானே பாவம்பா அந்தப் பொண்ணு என்று தெய்வமகள் சீரியலைப் பார்த்து புலம்பித் தவிக்கின்றனர் இல்லத்தரசிகள்.

வில்லி அண்ணி

வில்லி அண்ணி

தொலைக்காட்சித் தொடர்களில் பெரும்பாலும் அண்ணிக்கும் நாத்தனாருக்கும்தான் முட்டல் மோதல் இருக்கும். தெய்வமகள் தொடரில் கொழுந்தன் பிரகாஷ் மீது வன்மம் கொண்ட அண்ணி காயத்ரி செய்யும் சதிச்செயல்கள் ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கலையே..

கோபக்கார கொழுந்தன்

கோபக்கார கொழுந்தன்

அண்ணிக்கு சரி போட்டியாக கோபக்கார கொழுந்தனாக வரும் பிரகாஷ் கதாபாத்திரத்தை திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப் பின் என்று பிரிக்கலாம் அந்த அளவிற்கு இல்லத்தரசிகளைக் கவர்ந்துள்ளார்.

அப்பாவி சத்யா

அப்பாவி சத்யா

கதையின் நாயகி சத்யா, கம்பீரமான பெண், துணிச்சலான திறமையானவள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட சத்யாவோ திருமணத்திற்குப் பின்னர் வழக்கமான அழுமூஞ்சி கதாநாயகியாகவே மாறிவிட்டார்.

ரொமான்ஸ் தம்பதிகள்

ரொமான்ஸ் தம்பதிகள்

பிரகாஷ் - சத்யா தம்பதிகளிடையே அவ்வப்போது ரொமான்ஸ் எட்டிப்பார்த்தாலும் அண்ணி காயத்ரியின் சதியால் முட்டல் மோதல் ஏற்படுகிறது.

மகள் மேல் பாசம்

மகள் மேல் பாசம்

மனைவி சத்யா கர்ப்பதியான உடனேயே பிரகாஷ் நடவடிக்கை மொத்தமாக மாறிவிடுகிறது. பிறக்கப் போகும் மகளுக்கு மகா என்று பெயர்வைத்து கொண்டாடுகிறான்.

கலைந்த கர்ப்பம்

கலைந்த கர்ப்பம்

தங்கையின் சடங்குக்கு போன இடத்தில் சத்யாவின் கர்ப்பம் கலைந்துவிட அதை பிரகாஷ் குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைக்கிறாள் சத்யா.

கவுன்சிலரின் கோபம்

கவுன்சிலரின் கோபம்

பிரகாஷ் லஞ்சம் வாங்க மறுப்பதால் கோபம் கொண்ட கவுன்சிலர், பிரகாஷின் அண்ணி காயத்ரியுடன் சேர்ந்து சதி செய்கிறான். அதை அறியாக சத்யா சதியில் சிக்குகிறாள்.

பட்டென்ற அறை

பட்டென்ற அறை

பிரகாஷ் லஞ்சம் வாங்குவதாக யாரோ ஒருவர் சொன்னதை நம்பி, சோதனை போடுகிறாள். அதை அறிந்த பிரகாஷ் சத்யா அறைகிறான். இதில் மயங்கி மூர்ச்சையாகிறாள் சத்யா.

தெரிந்த உண்மை

தெரிந்த உண்மை

மருத்துவமனைக்கு போன இடத்தில் சத்யாவின் கர்ப்பம் கலைந்து போன உண்மை அவளது அம்மா சம்பூர்ணத்தின் மூலம் பிரகாஷ்க்கு தெரியவரவே நொறுங்கிப் போகிறான்.

விரட்டியது நியாயமா?

விரட்டியது நியாயமா?

கர்ப்பம் கலைந்து போனதற்கு முழு காரணமும் சத்யாதான் என்று எண்ணி அவளை அம்மாவீட்டிற்கு அனுப்பிவைக்கிறான். நீண்ட நாட்களாக இதை எதிர்பார்த்த அண்ணிக்கு கிலோ கணக்கில் அல்வா சாப்பிட்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது.

மகளின் விவாகரத்து

மகளின் விவாகரத்து

ஏற்கனவே இன்னொரு மகள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட சோகத்தில் இருக்கும் சம்பூர்ணத்திற்கு மகள் சத்யாவின் வாழ்க்கையும் இப்படியாகிவிட்டதே என்ற கவலையும் சேர்ந்து கொள்கிறது. இனி ஒரே அழுகைதான்.

இயக்குநரிடம் சில கேள்விகள்

இயக்குநரிடம் சில கேள்விகள்

கணவனை விபச்சார விடுதியில் பார்த்தாக தங்கையும், அம்மாவும் சொன்னதை நம்பாத சத்யா, யாரோ சொன்ன வார்த்தைகளை நம்பி பிரகாஷை சந்தேகப்பட்டது ஏன்? கர்ப்பம் கலைந்தால் பெண்ணால் மறுபடியும் கருத்தரிக்க முடியாதா? அப்படி எதுவும் மருத்துவர் கூறவில்லையே? பின் ஏன் மனைவியை வீட்டை விட்டு விரட்ட வேண்டும்.

அடிப்பதும் குடிப்பதும் அடிக்கடி

அடிப்பதும் குடிப்பதும் அடிக்கடி

டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பெண்களை அடிப்பதைப் போன்ற காட்சியை அடிக்கடி வைப்பது ஏன்? இவை தவிர தெய்வமகள் சீரியலில் நிறைய எபிசோடுகளில் டாஸ்மாக் பார் சீன் வைக்கப்படுகிறதே? ப்ரைம்டைமில் எல்லோரும் பார்க்கும் சீரியலில் இவற்றை தவிர்க்கலாமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X