சினிமாவில் யாரை ஸ்டார் ஆக்கறதுன்னு தீர்மானிக்கறது ஜனங்கள் இல்லை....!

சென்னை: தமிழ் சினிமாவில் யாரை நம்பர் ஒன் நடிகராக்குவது, யாரை பீக் நடிகையாக்குவது என்று தீர்மானிப்பது எப்போதும் மக்களில்லை.

மக்களுக்கு பிடிச்சு இருக்கு.... மக்களுக்கு பிடிச்சு இருக்குன்னு இந்த நடிகரை, இந்த நடிகையை என்று படங்களில் நடிக்க வச்சு அவர்களை பிடிக்கற மாதிரி நமக்குள் திணிப்பது இண்டஸ்ட்ரியில இருப்பவர்கள்தான்.

இப்படித்தான் (கடவுள்) அப்பாவையும் ,பிள்ளையையும் தன் பேரில வச்சு நடிக்கும் நடிகரின் முதலிரண்டு படங்கள் பிளாப் ஆன போதும்...அவரை யாரும் கழுவி கழுவி ஊத்தாதபடிக்கு அவரின் தோல்வி நிலைமை யாருக்கும் தெரியாத மாதிரி இண்டஸ்ட்ரியினரே மறைச்சாங்க.

படம் படு லோக்கல்

படம் படு லோக்கல்

அண்மையில் படு லோக்கலா ஒரு படம் வந்துச்சு. இப்போ பட உலகமே அதை வச்சு இவரை ஒதுக்க பிளான் பண்ணிட்டாங்க. கரணம் என்னன்னு பார்த்தா, டிஸ்ட்ரிபியூஷனில் நடிகர் தலையிட்டதுதானாம்.

பிரசாந்த் மாதிரி

பிரசாந்த் மாதிரி

எல்லா தரப்பினரும் ஒன்று சேர்ந்து இவரை டவுன் டவுன் ஆக்கி, பிரசாந்த் மாதிரி காணாமல் போக அடிக்கணும்னு திட்டமாம். நடிகர் பிரசாந்த் நல்ல மார்க்கெட்டில், சிக்ஸ் பேக்ஸ் நடிகராக இருக்கும் போதே ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

வளரும் வரை வளர்ந்தவர்கள்

வளரும் வரை வளர்ந்தவர்கள்

காரணம் என்னன்னு நடிகரும், பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜனிடம் கேட்டால் தெரியும். இதை எல்லாம் மீறி வளர்ந்தவர்கள் கொஞ்சம் வளரும் வரை யார் பிரச்சனையிலும் தலையிடாமல் இருந்ததால்தான். அதோடு மக்களுக்கும் அதிகமாக பிடித்து போனதால்தான்.

நல்லநடிகர் விமல்

நல்லநடிகர் விமல்

நடிகர் விமல் நல்ல நடிகர்...கிடு கிடுவென்று நிறைய படங்கள் நடிக்க ஆரம்பிச்சதில் பலரும் அதாவது அவருடன் அவர் செட்டாக நடிக்க வந்த பலரும் பொறாமை பட ஆரம்பித்து, தங்களை வளர்த்துவிட பல வேலைகளை செய்து விமலின் வாய்ப்புக்களைத் த தட்டிப் பறித்தவர்கள் உண்டாம்.

ரொம்ப டிப்ரஷன்

ரொம்ப டிப்ரஷன்

இந்த லிஸ்டில் இப்போது படு டிப்ரஷனிலிருக்கும் நடிகர் மேற்கொண்டவர் என்று சொல்கிறார்கள். திரைத்துறை தன்னை இப்படி திட்டமிட்டே ஒதுக்குவது கண்டு... இப்போதுதான் கொஞ்சம் அடக்கி வாசிச்சு இருந்திருக்கலாமோன்னு ஃபீல் பன்றாராம் நடிகர்.

பாவம் இவரின் மனைவி

பாவம் இவரின் மனைவி

இவரது டிப்ரஷன் மனைவியும் தொற்றிக்கொள்ள அவர் மன நல மருத்துவர் வரைக்கும் சென்று வந்து இருக்காராம். கணவருக்கும் அவ்வப்போது சில மன நல டிப்ஸ்களை வழங்கி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X