Kizhakku vasal serial: கிழக்கு வாசல் தேவராஜ் நாகப்பன் ரவுடிகள் லிஸ்டிலா?

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல். நிறைய வன்முறைகள் ஒரு மீனவ கிராமத்தில் நடக்கிறது என்றால் நிஜமாக நம்ப முடியவில்லை.

ஆனால், இந்த கிழக்கு வாசல் கிராமத்தில், எடுத்த உடன் அரிவாள் வெட்டு, குண்டு வெடிப்பு, கத்தி குத்துன்னு குலை நடுங்குது.

தேவராஜ் ஆட்கள், நாகப்பன் ஆட்கள் என்று ஊர் இரண்டு பட்டு கிடக்கிறது. பாவம் இரண்டு பக்கமும் நிறைய பெண்கள் விதவையாக இருக்கிறார்கள்.

 இடைத் தரகர்கள்

இடைத் தரகர்கள்

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள்.இங்கு கூத்தாடிகள் இல்லை, மக்களே ரெண்டு பட்டு கிடப்பதைத்தான் விரும்புகிறார்கள். தேவராஜ், நாகப்பனின் மகள் யாழினி தன்னந்தனி பெண்ணாக தன்னைத் தேடி வந்து, கோயில் திருவிழாவை நடத்துவதாக சொல்லி நிறைய உயிர் பலியானது, பெண்கள் விதவை ஆனது குறித்து நெஞ்சில் உரைக்கும்படி பேசுகிறாள்.

 தேவராஜ் ஏமாற்றியது

தேவராஜ் ஏமாற்றியது

படகுப் போட்டியிலும், தனது அப்பா நாகப்பனின் மீன் பிடி வலையை ஓட்டையாக்கி தேவராஜ் ஜெயிச்சு, மீட்டும் தனது அப்பாவுடன் தோழமையாக இருக்கும் மக்களுக்கு தீங்கு இழைப்பதுன்னு அடாவடித்தனம் செய்வது எல்லாவற்றையும் கூறி செல்கிறாள். இதனால் மனம் மாறிய தேவராஜ், மீண்டும் நாகப்பனை தனது நண்பனாக்கிக்க அவனுடன் தனியாகப்பேச வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.

 நமபிய நாகப்பனும்

நமபிய நாகப்பனும்

நம்பி தனியாக வந்த நாகப்பன் ,ஒளிந்திருந்த தேவராஜின் ஆட்களை பார்த்து விடுகிறார். பார்த்தியாலே..என் நம்பிக்கையை கெடுத்துட்ட. என்னைத் தனியா வரச்சொல்லிட்டு நீ ஆட்களை கூட்டிட்டு வந்திருக்கே. உன் கள்ளத்தனம் தெரியும்லே . அதான் நானும் என் ஆட்களை அழைச்சுட்டு வந்தேன்னு சொல்லி, ரெண்டு தரப்பிலும் சண்டை. உயிர் பலி

 போலீஸ் இன்ஸ்பெக்டர்

போலீஸ் இன்ஸ்பெக்டர்

இதை சகிச்சுக்க முடியாத போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு லெட்டர் டைப் செய்ய சொல்லி, அதை தேவராஜிடம் ஒன்றும், நாகப்பனிடம் ஒன்றும் என்று கொடுக்க சொல்கிறார். கான்ஸ்டபிள் சார் இதை குடுத்தா நான் உயிரோட கூட திரும்பி வர மாட்டேன் சார்னு பயப்படறார். அப்படி அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தால், இரண்டு பேரும் மக்களின் உயிர் பலிக்கு காரணமாக இருப்பதால், அவர்களை ரவுடிகள் லிஸ்டில் சேர்த்து விட்டதாகவும், இருவரும் தினம் வந்து ஸ்டேஷனில் கை எழுத்து போட்டுவிட்டு செல்ல வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X