Kizhakku vasal serial: நம்பலாமா.. தேவராஜ் நாகப்பனுக்கு சமரசம் பேச அழைப்பு விடறார்!

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் தேவராஜ் நாகப்பனிடம் சமரசம் பேசி விடலாம் என்கிற முடிவுக்கு வந்துட்டார்.

கிழக்கு வாசல் கிராம மீனவ மக்கள் இரு பிரிவினராக பிரிந்து கிடக்கிறார்கள். தேவராஜ் தரப்பில் பாதி மக்கள், நாகப்பன் தரப்பில் பாதி மக்கள் என்று பிரிவினை.

இருவர் தரப்பிலும் வன்முறை தலை விரித்தாடுகிறது. இவருக்காக அவர் ஆட்களை கொல்வது, அவருக்காக இவர் ஆட்களை கொல்வது என்று பழிக்குப் பழி தாண்டவமாடுகிறது.

மகள் யாழினி

மகள் யாழினி

அப்பா நாகப்பன் மக்களுக்கு நல்லதுதான் செய்கிறார். .தேவராஜ்தான் அப்பாவுக்கு அடாவடித்தனம், அப்பாவைச் சேர்ந்த மக்களை வாழ விடாமல் செய்வது என்று வன்முறையை கையில் எடுக்கிறார் என்பது நாகப்பனின் மூத்த மகள் யாழினியின் எண்ணம். சின்ன மகள் வெளியூர் கல்லூரியில் படிக்கிறாள். தேவராஜின் வீட்டுக்கே சென்று தைரியமாக மிரட்டல் விடுத்து நல்லவரா நடந்துக்கோங்கன்னு எச்சரிக்கை விடுத்துட்டு வர்றா யாழினி.

தேவராஜ் மகன்

தேவராஜ் மகன்

தேவராஜுக்கு தங்கை ஒருத்தி இருக்கிறாள் அவளுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்துகிட்டு இருக்கார் தேவராஜ். ஆனால்,தேவராஜின் நிலை, ஊர் நிலையை தெரிந்த மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்தை நிறுத்திடறாங்க. ஆரம்பத்தில் இருந்து நடந்ததைப் பார்த்தால் தேவராஜ்தான் நிறைய அடாவடிகளை செய்தவர் என்பது நமக்கு தெரியுது. இருந்தாலும், தங்கை மகளின் கல்யாணம் நின்று போன வருத்தத்தில் இருக்கார் தேவராஜ்.

மகன் அப்பா தேவராஜ்

மகன் அப்பா தேவராஜ்

இந்த சமயத்தில்தான் படிச்சு முடிச்சுட்டு தேவராஜின் மகன் ஊருக்கு வருகிறான். வரும்போதே அப்பாவை கொலை செய்ய முயற்சித்த நாகப்பனின் ஆள் ஒருவனின் தலையை வெட்டி கொண்டு வந்து அப்பாவுக்கு தெரியாமால் அப்பாவோட ஆள்கிட்ட கொடுத்து பீதியை கிளப்பறான். தேவராஜ், தன்னை ஒருவன் கொலை செய்ய வந்த விஷயம் பிள்ளைக்குத் தெரியக்கூடாது என்று ஆட்களிடம் சொல்லி வைக்கிறார். ஆனால், இவனோ தலையையே கொண்டு வந்துட்டான்.

தேவராஜ் யாழினி

தேவராஜ் யாழினி

நாகப்பனின் மகள் யாழினி தன் கோட்டைக்கே தைரியமாக வந்து பேசியதில் இருந்து தேவராஜ் ஒரு மாதிரி இருக்கார். திடீர்னு நாகப்பன் கிட்டே சமரசம் பேசணும்னு ஆசைப்பட, வீட்டில் யாரும் இதுக்கு சம்மதிக்க மறுக்கறாங்க. நாகப்பனுக்கு சொல்லி அனுப்புங்கன்னு சொல்லிடறார் தேவராஜ்.நாகப்பன் விஷயம் கேட்டு தனியாகக் கிளம்ப, நாகப்பன் வீட்டிலும் இதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கறாங்க. இருந்தாலும் கலக்கத்துடன் நாகப்பன் கிளம்ப யாழினியை காணலை. மனைவி சொம்பில் தண்ணீர் தர அது தவறி கீழே விழுது.

சீரியல் முழுக்க என்ன நடக்குமோன்னு பதற்றமாவே இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X