Kizhaku vasal serial: அடடா அநியாயமா தேவராஜ் ஆள் ராமு நாகப்பனை கொன்னுட்டானே!

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் அநியாயமாக தேவராஜ் ஆள் ராமு, நல்லவரான நாகப்பனை கொன்னுடறான். கத்தியால் குத்து பட்டு கிடந்த நாகப்பனைத் தேடிப் போன மகள் யாழினிதான் அப்பா உயிருக்கு போராடி இருப்பதைப் பார்த்து ஓடிவர்றா.

உடனே அப்பா ஓட்டி வந்த ஜீப்பில் அப்பாவைத் தூக்கிப் போட்டுகொண்டு, அப்பா கண்ணை மூடிவிடாமல் கான்ஷியஸா இருக்கணும்னு, அப்பா சின்ன வயசில் தன்னோடும், தனது தங்கையோடும் விளையாடியதை பேசிக்கிட்டே ஜீப் ஓட்டறா.

அவரும், வேதனையால் துடித்தபடி கேட்டு வந்தாலும், திடீர்னு கண்ணை மூடிடறார்.அப்பா கண்ணை மூடாதீங்கப்பான்னு அழுதுகிட்டே பேசறா யாழினி. ஆனாலும் மகளின் தோளில் சாய்ந்து உயிரை விடறார் நாகப்பன்.

துடித்துடிக்கும் மகள்

துடித்துடிக்கும் மகள்

அப்பாவின் இறப்பை கண்முன் அதுவும் தனது தோளில் சாய்ஞ்சு, அவரின் இறப்பைப் பார்த்த மகள் கதறி அழுகிறாள். அம்மாவும், தங்கச்சியும் உங்களுக்காக காத்து இருப்பங்கப்பா... எழுந்திருக்கப்பான்னு அழறா. என்ன பிரயோஜனம். இங்கு, நாகப்பனின் மனைவிக்கு கெட்ட சகுனம் காமிக்குது. பெண்களோட பிறந்த நாளுக்கு அதிகாலையில் அம்மனின் ரத்த சந்தனத்தை பரிசாகக் கொடுக்க எடுத்துவர கடலோர அம்மன் கோயிலுக்கு போன நாகப்பன் இப்போது பிணமாக வருகிறார்.

தேவராஜ் ஐயாவுக்கு பரிசு

தேவராஜ் ஐயாவுக்கு பரிசு

தேவராஜின் அடியாள் ராமு, எங்க தேவராஜ் அண்ணாச்சிக்கு உன் உசுரைத்தான் நான் பரிசா தரப்போறேன். இனிமேல் இந்த மீனவ கிராமமே எங்க அண்ணாச்சியோடதுதான்னு சிரிக்கிறான். தேவராஜ், குறுக்கு வழியில் பயணிப்பவர், நாகப்பன் நேர்வழியில் பயணித்து, தன்னை நம்பி இருக்கும் மக்களைக் கூட காப்பாத்த முடியாமல் தவிக்கும் நல்ல மனிதர்..

அப்பா பற்றி யாழினி

அப்பா பற்றி யாழினி

தனது அப்பா பற்றி ரொம்பநல்லஅபிப்ராயம் வைத்து, அவரின் மனசு படி செயல் படுபவள் நாகப்பனின் மகள் யாழினி. எப்போதும் அப்பா மக்களுக்கு நல்லதையே செய்வார் என்று, அவரின் எந்த செயலுக்கும் பக்கபலமாக இருப்பவள். இவள் தேவராஜை சந்திச்சு தைரியமா அவர் செய்யும் தப்பை சொல்லி காட்டியதில் திருந்தியவர்தான் தேவராஜ்., ஆனால்,என்ன பிரயோஜனம்?

நண்பன் வீட்டுக்கு

நண்பன் வீட்டுக்கு

இங்கு தேவராஜ் நாகப்பன் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று அவனுக்கு உன் பழைய நண்பன் வந்துட்டேண்டான்னு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்னு ஆசையா கிளம்பறார். குடும்பத்தினரையும் கிளம்பச்சொல்ல,,அப்பா உங்க நண்பர்கள் எல்லார் வீட்டுக்கும்தான் நாம போயிட்டு வந்து இருக்கோம்.. இது யாருப்பா அப்படி புதிய நண்பர்னு கேட்கிறான் தேவராஜின் மகன்.போனால் உனக்கே தெரியும்...நான் ரொம்ப ஆசையா காத்து இருக்கேன் .சீக்கிரம் கிளம்புங்கன்னு சொல்றார்.

கடைசியில் நாகப்பனின் சாவுக்குத்தான் போகப் போறாங்க போல...என்ன கொடுமை இது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X