வெள்ளைத்தாமரை முடிஞ்சது.... தேவதை தொடங்கியாச்சு

By Mayura Akilan

சன் டிவியில் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வெள்ளைத்தாமரை தொடரை ஒருவழியாக முடித்துவிட்டு புதிதாக தேவதை என்ற தொடரை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளனர்.

தொடரின் ஆரம்பமே வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் இரண்டு காதல் ஜோடிகள் காவல்நிலையில் பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதில் இரண்டு ஜோடிகளுமே ஒருவருக்கொருவர் சாட்சிக் கையெழுத்து போட அங்கு வரும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

நகைச்சுவை கலந்த திரைக்கதையை கொண்ட இத்தொடரின் நாயகி பூரணி. மெஸ் நடத்தும் இந்த பூரணிக்கு திருமணம் நடந்தால்தான் அவளது சகோதரர்கள் மூன்று பேருக்கு ஒரு வழி பிறக்கும். ஆனால், அவளுக்குத் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இதுவரை 25 வரன்கள் பார்த்துவிட்டு போய்விட்டனர். ஆனால் எதுவும் அமையவில்லை.இது ஏன் என்பதற்கு பகீர் பின்னணி இருக்கிறது. அது என்ன என்பது தொடரின் கதை.

அன்னபூரணி

அன்னபூரணி

மலிவு விலையில் மெஸ் நடத்தும் அன்னபூரணியாக அவளை அந்த பகுதியில் அத்தனை பேருக்கும் தெரியும். அந்த குறைந்த விலையைக் கூடக் கொடுக்க முடியாமல் ஓசியில் சாப்பிட்டுப் போகும் ரெகுலர் கஸ்டமர்கள் அவளுக்கு நிறைய பேர் உண்டு. பூரணி முகம் சுளிக்க மாட்டாள். பசித்தவருக்கு உணவளிப்பது அவளது பிறவிக்குணம்

காதலர்களுக்கு நாயகி

காதலர்களுக்கு நாயகி

வீடு ஒப்புக்கொள்ளாத பல காதல் திருமணங்களை அவள் நிச்சயித்து நடத்தி வைத்திருக்கிறாள். எத்தனை தடைகள், எப்பேர்ப்பட்ட வில்லன்கள் வந்தாலும் பூரணி தலையிட்டு விட்டால் ஒரு திருமணம் நடந்தே தீரும். இந்த ஒரே கரணத்துக்காகவே பகுதி வாழ் இளைய தலைமுறை அவளை தலைக்கு மேல் வைத்து கூத்தாடும். அக்கா, அக்கா என்று நாய்க் குட்டிபோல் அவள் பின்னால் சுற்றுவார்கள்.

அன்பான மகள்

அன்பான மகள்

பூரணியின் பெற்றோருக்கு அவள் ஒரு அன்பான மகள். இருபத்தேழு வயதாகியும் இன்னும் கல்யாணமாகவில்லையே என்று பெற்றோர் பரிதவிக்க, தினசரி யாராவது ஒருவன் வந்து பெண் பார்த்து போவதற்கு, அவள் மாலையானால் சீவி,சிங்காரித்து, தலைகுனிந்து காபி டம்பளருடன் ஹாலுக்கு ஆஜராவது வழக்கம். இதுவரை 25 வரன்கள் வந்து போய்விட்டனர் எதுவும் அமையவில்லை.

சஸ்பென்ஸ் என்ன?

சஸ்பென்ஸ் என்ன?

காதலிக்கும் அனைவருக்கும் அவள்தான் திருமணம் செய்து வைக்கிறாள். ஆனால், அவள் வாழ்வில் ஏன் திருமணம் நடக்கவில்லை? என்ற கேள்விக்கு பகீர் பின்னணியில் மையம் கொண்டிருக்கிறது இந்த பூரணிப் புயல் !.

அபிநயா கிரியேஷன்ஸ்

அபிநயா கிரியேஷன்ஸ்

அபிநயா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள தொடர், ‘தேவதை'. சுபத்ரா, டி.துரைராஜ், ஷோபனா, ரகுநாத், நேசன் உட்பட பலர் நடிக்கின்றனர். பி.நீராவி பாண்டியன் இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை பா.ராகவன், வசனம் கார்க்கி. இசை பாலபாரதி, ஒளிப்பதிவு ராஜூஸ்.

இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் நண்பகல் 12 மணிக்கு சன் டி.வியில் ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X