சீரியலும் சினிமா மாதிரிதான்!: தேவயானி

By Mayura Akilan

Devayani
அழகான அமைதியான டீச்சர் மருமகள், அதிரடியான காவல்துறை அதிகாரி என சன் தொலைக்காட்சியின் முத்தாரம் தொடரில் கலக்கலாக தனது நடிப்பு முத்திரையை பதித்து வருகிறார் நடிகை தேவயானி.

சினிமாவின் அழகு தேவதையாக வலம் வந்தவர் திடீர் என திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினார். பின்னர் யாருமே எதிர்பாராத நிலையில் கோலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் பிரவேசம் செய்து அதில் நடித்துக்கொண்டே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானர். பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் கொடிமுல்லையாய் அம்மா, பெண் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார்.

இதோ மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தாரம் தொடருக்காக சற்றே உடல் மெலிந்து முன்பை விட இளமையாய், கூடுதல் பொலிவோடு நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்தத் தொடரிலும் தேவையானிக்கு இரட்டை வேடம்தான் அமைதியான பயந்த சுபாவம் கொண்ட குடும்ப பெண் வேடம். அதற்கு நேர்மாறாக அதிரடியான காவல்துறை அதிகாரி வேடம் என தேவயானிக்கு பெண்களிடையே கூடுதல் மரியாதையை பெற்றுத்தந்துள்ளது இந்த முத்தாரம் தொடர் என்றே கூறலாம். சீரியல் சூட்டிங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் தேவையானி கொஞ்சமே கொஞ்சம் கிடைத்த இடைவெளியில் நம்மிடையே பேசினார்.

“கோலங்கள் அபி கேரக்டர்லேருந்து கொஞ்சநாள் என்னால வெளில வர முடியலை. அதே போல இப்ப முத்தாரம் கிடைச்சிருக்கு. இது குழந்தையில்லாத பெண்ணோட வாழ்க்கைப் போராட்டத்தைப் பத்தின கதை. குழந்தையின்மைங்கிறது இன்னிக்கு சமுதாயத்துல பெரிய பிரச்னையா இருக்கு. பர்சனலா பாதிக்கப்படற பெண்ணுக்கு மட்டும்தான் அந்த வலியும் வேதனையும் தெரியும். அவ சந்திக்கிற மனிதர்கள், எதிர்கொள்ற கேள்விகள், போராட்டங்கள்னு யதார்த்தமான கேரக்டர். அதேபோல காவல்துறை அதிகாரி வேடமும் எனக்கு புதிய களம். இரண்டுமே எனக்கு சவாலான கதாபாத்திரங்கள்தான்.''

“திருமணத்திற்கு அப்புறம் சினிமால எனக்கேத்த கேரக்டர் அமையலை. சீரியல்ல என்னை மையப்படுத்திதான் கதையே நகருது. அதனால் எனக்கு சினிமாவை விட இப்போ சீரியல்ல நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு ஏன்னா ஒவ்வொரு சீரியலும் எனக்கு சினிமா மாதிரிதான்!" என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார் தேவயானி.

“திரைப்படத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், பல போட்டிகள் இருந்தும் இன்றும் ரசிகர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதால், நான் தமிழ் ரசிகர்களை மறக்க முடியாது. நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்கு கடமைப்பட்டவள்" என்றும் கூறி தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஐஸ்வைத்தார் தமிழ்நாட்டு மருமகள் தேவயானி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X