இறுதி வாய்ப்பை தவற விட்ட தேவயானி மகள்.. சரிகமப சீசன் 5 பைனலிஸ்ட் போட்டியாளர்கள் யார் யார்?

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக சரிகமப நிகழ்ச்சி உள்ளது. சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 மே மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் இறுதிப்போட்டிக்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளனர்.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5ல் நடுவர்களாக சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக், ஸ்வேதா மோகன், எஸ்பி சரண். சைந்தவி ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், நடிகை தேவயாணியின் மூத்த மகள் இனியா கலந்து கொண்டார். முதல் ரவுண்டில் பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தார். பல கட்டமாக நடந்த நிகழ்ச்சியில் தேவயானியின் மகள் இனியா நன்றாக பாடி அடுத்தடுத்த கட்டத்திற்கு வந்தார்.

saregamapa devayani Zee tamil
Photo Credit:

6 போட்டியாளர்கள்: ஒவ்வொரு வாரமும் இறுதிப்போட்டியாளர்களை தேர்வு செய்யும் வகையில் 'One & One' சுற்று நடைபெற்று வந்தது. இதில், 6 பைனலிஸ்ட் போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளனர். இதில், சுஷாந்திகா, சபேசன், செந்தமிழன், பவித்ரா, ஸ்ரீஹரி மற்றும் ஷிவானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஆரம்பம் முதல் சிறப்பாக பாடி வந்த தேவயாணி மகள் இனியா பைனலிஸ்டுக்கு செல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கடைசியாக நடந்த சுற்றில், தேவயானி மகளா அல்லது பவித்ராவா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பவித்ரா இறுதி சுற்றுக்கு தேர்வானார். கடைசி நேரத்தில் இனியாவிற்கு பைனலுக்கு நுழையும் வாய்ப்பு பறிபோனது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X