Devayani: எல்லா புகழும் அம்மாக்கு.. இனியா பேசியதை கேட்டு கண்கலங்கிய தேவயானி!

சென்னை: நடிகை தேவயானி, ராஜகுமாரனின் மகள் இனியா, ஜீ தமிழ் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 பாடி வருகிறார். இதில், "டெடிகேஷன் ரவுண்ட்" இனியா தனது அப்பாவிற்காக பாட்டுப்பாடி அசத்தினார். அதைப்பார்த்து தேவயானி, ராஜகுமாரன் இருவரும் கண்கலங்கினார்கள்.

டெடிகேஷன் ரவுண்டில் மகளின் பாடலை கேட்பதற்காக வந்த ராஜகுமாரன், நான் சிறு குழந்தையாக இருக்கும்போது தினமும் எனக்கு ஐந்து பைசாவை தருவார்கள். ஆனால், அந்த ஐந்து பைசாவை நான் செலவு செய்யாமல் அப்படியே வைத்திருந்து, வார நாட்களில் ஊரில் சண்டை போடுவார்கள். அந்த சந்தையில் படத்தின் பாட்டு புத்தகத்தை விற்பார்கள், அந்த பாட்டு புத்தகம் வாங்குவதற்காக அந்த காசை நான் அப்படியே சேமித்து வைத்து பாட்டு புத்தகம் வாங்கி படிப்பேன்.

saregamapa devayani Zee tamil
Photo Credit:

நடிகை தேவயானி: ஏன் என்றால் சிறுவயதில் இருந்தே, பாடல்கள் பாடுவதில் எனக்கு ஒரு அலாதியான விருப்பம் இருந்தது. ஆனால், என்னுடைய பெற்றோருக்கு இது பிடிக்காது என்பதால் அவர்களுக்கு தெரியாமல் அதை நான் படிப்பேன். ஒருநாள் அப்பா, இதை கண்டுபிடித்து விட்டு, என்னை அடி அடி என அடித்தார். ஆனால், அதே சந்தையில் நான் இயக்கிய நீ வருவாய் என படத்தின் பாடல் புத்தகம் வந்ததை பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். படங்களை இயக்கியிருக்கிறேன், தயாரித்திருக்கிறேன், ஒரு படத்தில் நடிகராகவும் நடித்து இருக்கிறேன். அப்போது எல்லாம் நான் எதையும் சாதிக்கவில்லை. ஆனால் இன்று என்னுடைய மகள் இந்த மேடையில் பாடுவதை கேட்கும் போது ஏதோ சாதித்தது போல என் மனம் மகிழ்ச்சி அடைகிறது.

எல்லா புகழும் அம்மாவிற்கு: இதைக்கேட்டு கண் கலங்கிய மகள் இனியா, எல்லா புகழும் அப்பாவிற்கு என்று சொல்ல, நீ இந்த இடத்திற்கு வருவதற்கு நான் காரணம் இல்லை, இதற்கு எல்லாம் காரணம் என்னுடைய மனைவி தேவயானி தான் என்று சொல்ல, உடனே இனியா எல்லா புகழும் அம்மாவிற்கு என்று சொல்ல இனியா கதறி அழுதார். அதைத்தொடர்ந்து பேசிய, இனியா, அம்மாவையும் அப்பாவையும் சேர்த்து வைத்த நீ வருவாய் படத்தில் இருந்து பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் என்ற பாடலை பாட போகிறேன் என்று சொன்னார். இதை தொடர்ந்து பேசிய தேவயானி, வீட்டில் இருந்தாலும் நானும் இனியாவும் இவ்வளவு நெருக்கமாக இருக்க மாட்டோம். மனம் விட்டு இப்படி அன்பை பகிர்ந்தது இல்லை. அப்படி ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த சரிகமபாவிற்கு மிகவும் நன்றி என்றார்.

அழகான குரல்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக சரிகமப நிகழ்ச்சி உள்ளது. மே மாதம் முதல், சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். பல கட்டமாக நடந்த நிகழ்ச்சியில் தேவயானியின் மகள் இனியா நன்றாக பாடி அடுத்தடுத்த கட்டத்திற்கு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இனியா டைட்டிலை வெல்லுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X