Just In
- 1 min ago
தீவிர சிகிச்சை.. 98 வயதில் கொரோனாவை வென்ற ரஜினி, கமல் பட நடிகர்.. முன்னாள் பாடி பில்டராமே!
- 34 min ago
ஃபைட்டர் இல்லையாம்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட டைட்டில் இதுதான்.. பர்ஸ்ட் லுக் மிரட்டுதே!
- 48 min ago
ஆரியின் வெற்றி.. தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது.. குஷி மோடில் பிரபலம்.. தரமான செய்கை!
- 1 hr ago
தனுஷ் படத்தில் நடிக்கும் சூர்யாவின் நண்பர்!
Don't Miss!
- News
அயோத்தி ராமர் கோயில்... இரண்டு நாள்களில் ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வசூல்
- Lifestyle
கொரோனா வைரஸ் உங்க இதயத்தை மோசமா பாதிச்சிட்டிருக்கு என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!
- Finance
15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..!
- Automobiles
உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
- Sports
ரூ. 20+ கோடி.. பல முக்கிய வீரர்களை வெளியிடும் சிஎஸ்கே.. வெளியான அந்த லிஸ்ட்.. இன்னும் 2 நாள்தான்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Naam Iruvar Namakku Iruvar Serial: தக்காளி ஜூஸ்... தேவி சொல்லும்போது எவ்ளோ அழகு!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மதுரைக்கே மல்லி வேணுமான்னு கேட்ட மாதிரி, மாயன் கிட்டேயே தக்காளி ஜூஸை போட்ருவேன்னு தேவி மிரட்டிட்டு போறா. தக்காளி.. கொள்ளை அழகா இருக்குதுங்க!
அரவிந்துக்கும், தாமரைக்குந்தேன் முதலிரவு.. மாயன் குதூகலம் ஆகிறான். வீட்ல இருக்கும் மொத்த பேரையும் கடை வீதிக்கு போயிட்டு லேட்டா வாங்கன்னு அனுப்பி வச்சுட்டான். விவரமா தேவியை மட்டும் வீட்டுல வச்சுக்கிட்டான்.
டேய் நீ என்ன எண்ணத்துல அவங்களை அனுப்பி வச்சேன்னு எனக்குத் தெரியும்டா... சத்தியமா சொல்லு.. யதார்த்தமாவா அவங்களை அனுப்பி வச்சேன்னு கேட்கறா.மாயன் சத்தியவானாச்சே..உண்மையை மட்டும்தானே பேசுவான்.

அடிக்கடி சொல்லுவியே
சொல்லுடா.. என்ன எண்ணத்துல அப்படி சொன்னேன்னு கேட்கிறாள். எனக்கு பொய் சொல்ல வராதுங்கன்னு மாயன் சொல்றான். எனக்குத் தெரியுண்டா.. உனக்கு போய் சொல்ல வராது.. ஆனா, எனக்கு கோவம் நல்லா வரும். அடிக்கடி நீ சொல்லுவியே..என்னது அதுன்னு கேட்கறா. தெரிஞ்சா அவளே சொல்ல வேண்டியதுதானேன்னு நாம நினைக்கறதுக்குள்ள அவளே சொல்றா.

கொண்டே புடுவேன்
ஆங்.. தெரிஞ்சு போச்சு.. ஓழுங்கா இருந்துக்க.. இல்லேன்னா கொண்டே போட்ருவேன்னு அவன் பாணியில் சொல்லி மிரட்டறா. இது கூட தேவி வாயால் சொல்லும்போது எல்லா மதுரை மக்களும், அதாவது .மாயனும் சொல்ற மாதிரி சாதாரணமத்தேன் இருந்துச்சு. ஆனால், போகிற போக்கில் மாயன் சொல்ற இன்னொரு லைன் சொல்லிட்டு போனா பாருங்க..

தக்காளி ஜூசை போட்ருவேன்
மாயனை விட்டு தேவி சற்றே தள்ளி போயி, லேசா திரும்பிப் பார்த்து, மாயன் என்ன சொல்ல போறாளோன்னு எதிர்பார்த்து நிற்க, தேவி சொல்றா.. தக்காளி ஜுஸைப் போட்ருவேன்னு..இது மதுரைக்கே மல்லி வேணுமான்னு மயன்கிட்டேயே அவன் டயலாக்கை பன்ச் வச்சு பேசியது போல ரசிக்கும்படி இருந்துச்சு.

அரவிந்த் தாமரை
தாமரையும், அரவிந்தும் சேர்ந்து 3 ஜோடிகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு பரிகாரத்தை முடிச்சுட்டாங்க. இப்போ ரெண்டு பேருக்கும் முதலிரவுன்னு சந்தோஷமா குடும்பமே வெளியில் போயிட்டாங்க. மாயனை கடுப்பேத்த, வரும்போது உனக்கும் பாப்கார்ன் வாங்கிட்டு வரேன்னு சொல்லி கிளம்பறா மாயனின் அக்கா... கடுப்புல இருக்கான் மாயன்.