Devi Priya: எல்லாமே வேகமா முடிஞ்சுபோச்சே.. கதறி அழுத தேவிப்பிரியா!

சென்னை: பஞ்சராகி இருந்த காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், நடிகை தேவி பிரியாவின் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் காரியத்தில் கலந்து கொண்ட தேவிபிரியா கதறி அழுதுள்ளார்.

பல தொலைக்காட்சி தொடர்கள் படங்களில் நடித்துள்ள நடிகை தேவி பிரியா, நடிகையாக மட்டுமில்லாமல் டப்பிங் கலைஞராக பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்து பெயர் எடுத்த இவர், செல்லமே, அண்ணாமலை, அத்திப்பூக்கள், சந்திரலேகா என பல்வேறு சீரியர்களில் நடித்து வருகிறார்.

நடிகை தேவி பிரியா: இந்நிலையில் கடந்த வாரம், நடிகை தேவி பிரியா, சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது பஞ்சரானதால், கார் ஓட்டுநர் முத்துகணேஷ் மற்றும் நடிகை தேவிபிரியாவின் உதவியாளர் திவாகர் இருவரும் காரின் டயரை மாறிக்கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் அடையாளம் தெரியாத வாகனம் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஓட்டு முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நடிகை தேவிப்பிரியா காருக்குள் இருந்ததால் அவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. உதவியாளர் திவாகர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை கொடுத்த தகவலின் பேரில், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பேசிய தேவி பிரியா, கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து விட்டது. 15 வருடமாக அவன் என் தம்பிபோல என்னுடன் இருக்கிறான், நான் எங்கு சென்றாலும் என்னுடன் அவன் வருவான், முத்துவின் இழப்பை நான் எப்படி தாக்கிக்கொள்ள போகிறேன் என கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

Devi Priya Instagram
Photo Credit:

கண்ணீர் பதிவு: இன்று முத்துகணேஷின்16 நாள் காரியம் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட நடிகை தேவி பிரியா, முத்துவின் போட்டோவிற்கு மலர் தூசி தனது அஞ்சலியை செலுத்தி விட்டு, இந்த உலகை விட்டு நீ சென்ற வேகம்.... 15 நாட்கள் வேகமாக சென்று விட்டன கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X