Poove poochuda va serial: தினம் தினம் தனம் தனம்.. சந்தோஷ சிவா!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் பூவே பூச்சுட வா சீரியலில் நடிக்கும் தனலட்சுமி ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்.. இருக்காதா பின்னே.. தனம் மனதில்தான் சிவா குடிகொண்டிருக்கிறாரே.. அது மட்டுமா.. தனது பிறந்த நாளை விசேஷமாக சிவா கொண்டாடிய விதத்தால் அசந்து போய் மெய் சிலிர்த்துப் போயுள்ளாராம் தனம்.
தனலட்சுமியைத் தெரியாதவங்க இருக்க முடியாது.. அதுவும் டிவி சீரியலை, சீரியஸாக பார்க்கும் யாருமே தனத்தை தவற விட முடியாது. பூவே பூச்சவாட சீரியலில் நடித்து வருகிறார் தனலட்சுமி. இவரது மனம் கவர்ந்தவர்தான் சிவா.
சிவா மனசுல சக்தி தான் இருக்கணுமா என்ன.. தனம் கூட இருக்கலாம் இல்லையா.. நம்ம சிவாவும் அப்படித்தான்.. தனத்தை தனது மகாராணியாக மனதில் ஏந்திக் கொண்டிருக்கிறார். தனமும் சிவாவும் சமீபத்தில் அதாவது ஜூன் 17 ம் தேதி ஒரு சிறப்பான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வேறு என்ன தனத்தின் பிறந்த நாள்தான் அது.

சேர்ந்து பிறந்த நாள்
சிங்கிளாக கொண்டாடினாலே அதகளப்படும்.. அதுவும் சிவாவுடன் இணைந்து என்றால் கேட்கவா வேண்டும். இருவரும் சேர்ந்து கலக்கி விட்டனராம். இந்த சந்தோஷத்தை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொண்டுள்ளது இந்த பாசக்கார ஜோடி. இருக்காதா பின்னே.. காதலும் காதலும் சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள் அல்லவா.. சும்மா சொல்லக் கூடாது.. அன்பு நிறையவே பொங்கி வழிந்துள்ளது.

2010ம் ஆண்டிலிருந்தே
அந்த பிறந்த நாள் கொண்டாட்ட படத்துடன் தனம் எழுதிய மெசேஜ்தான் சூப்பரானது. "நன்றி சிவா. எனது பிறந்த நாளை சிறப்பாக்கி விட்டீர்கள். எப்போதுமே என்னை ஏமாற்றியதே இல்லை நீங்கள். 2010ம் ஆண்டிலிருந்தே இப்படித்தான். இந்த வருடம் மிகமுக்கியமானதாக மாறி விட்டது. நடுக் கடலில் கேக் வெட்டியதை மறக்க முடியாது சிவா.. டன் கணக்கில் நன்றி என்று கூறி சிலாகித்துள்ளார் தனம்.

தனம் பிறந்த நாளை
உண்மையில் தனம் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்த சிவா கடலோரத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அங்கு வைத்து பிறந்த நாள் கொண்டாட்டம் என்று அவர் கூறியபோது தனம் ஆச்சரியமாகி விட்டாராம். கூடவே குஷியும். அத்தோடு நிறைய கிப்ட்டுகள் வேறு.. பெண் மனசு பூரிச்சுப் போக இதை விட வேறென்ன வேண்டும்.

மனசையும் சேர்த்து
அத்தோடு ஒரு அழகான வைர மோதிரத்தையும் தனத்தின் விரலில் மாட்டி அழகு பார்த்துள்ளார் சிவா.. காதலன்னா இப்படித்தாய்யா இருக்கணும்.. வைர மோதிரத்தோடு மனசையும் சேர்த்து மாட்டி விட்டுட்டாரு பாருங்க. கடந்த 9 வருடமாக காதலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டுள்ளது இந்த காதல் ஜோடி. இதனால் நன்கு ஆழமாக வேறூன்றியுள்ளதாம் அன்பும்.

அனு கேரக்டரில்
பூவே பூச்சூடவா சீரியலில் தற்போது அனு என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனம். ரொம்பப் பிரபலமான வேடம் இது. அதேபோல யாழினி, தாமரை, சினிமா ஜங்கஷனிலும் இவர் அசத்தியுள்ளார். ஆர்.கே.செல்வமணி - ரோஜா போல தனமும் - சிவாவும் காலம் காலத்திற்கும் சந்தோஷமாக வாழட்டும்.. வாழ்த்துவோம் வாங்க.


Click it and Unblock the Notifications











