Pandian Stores Serial: நம்ம பிள்ளைங்க அப்படி இல்லை மாமா... கூடவே இருப்பாங்க!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பி ஒற்றுமையை குலைக்க முடிவு பண்ணி இருக்கார் ஜீவாவின் மாமனார். ஒரு வழியா மாமனார் வீட்டு விருந்துக்கு போயிருந்த ஜீவா மீனாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டான்.

மீனாவின் அப்பா இடம் வாங்கிப் போட்டு இருப்பதைக் காண்பிச்சு.. இது உன் மாமனார் வூட்டு இடமா ஜீவான்னு கேட்கிறார் அண்ணன் மூர்த்தி. ஆமாண்ணே என்று ஜீவா சொல்றான். சூப்பர் மார்க்கெட் கட்டப் போறாப்டின்னு கேள்விப்பட்டேன் உண்மையாடா ஜீவான்னு மறுபடியும் கேட்கிறார் அண்ணண்.

ஆமாண்ணே.. அப்பிடித்தான் நானும் கேள்விப்பட்டேன்னு சொல்றன் ஜீவா. ஜீவா இதை பத்தி எதுவும் கண்டுக்கலை. தன்னை அந்த சூப்பர் மார்க்கெட்டை பார்த்துக்க சொன்னது இது பத்தி கூட அண்ணன் கிட்டே ஜீவா சொல்லலை. மூர்த்திக்குத்தான் கவலை வந்துருது.

ஜீவா நம்மைவிட்டு

ஜீவா நம்மைவிட்டு

அண்ணன் மூர்த்திக்கு ஜீவாவிடம் கேட்டு உறுதி செய்துகொண்ட நிலையில், நிம்மதியா இருக்க முடியலை. மெதுவா தனத்திடம் போயி, ஜீவாவின் மாமனார் சூப்பர் மார்க்கெட் கட்டப் போறாராம். ஜீவா மாமனார் வீட்டோட போயிடுவானா என்று கலக்கமாக கேட்கிறார். இல்லை மாமா அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காதுன்னு புருஷனுக்கு தைரியம் சொல்றா தனம்.

தம்பிங்க போயிருவாங்களா

தம்பிங்க போயிருவாங்களா

அப்படியும் கலக்கத்தில் இருந்து விடுபடாத மூர்த்தி.. எனக்கு கவலையா இருக்கு தனம்.. தம்பிங்க நம்மை விட்டுப் போயிருவாங்களா என்று மறுபடியும் பொண்டாட்டியிடம் கேட்கிறார். மாமா நம்ம பிள்ளைங்க நம்மை விட்டு எங்கும் போக மாட்டாங்க மாமா... நம்புங்க. தைரியமா இருங்க மாமா.. அவங்க நம்ம பிள்ளைங்க என்று தனம் சொல்றா.

100 ஆயுசுங்க...!

100 ஆயுசுங்க...!

முல்லைக்கு போன் வருது.. எடுத்துப் பார்க்கறா கதிர்தான் போனில். எடுத்து உங்களுக்கு 100 ஆயுசுங்கன்னு சொல்றா. இப்போதுதான் உங்களை பத்தி நினைச்சுகிட்டு இருந்தேன்னு சொல்றா. 100 வயசுக்கு நான் இருந்து என்ன பண்ணப் போறேன்னு சொல்றான் அவன். ஏன்.. இருங்களேன்னு சொல்றா இவள். நீயும் கூட இருக்கேன்னு சொல்லு.. நான் இருக்கேன்னு சொல்றான் கதிர். பின்னே இல்லாம என்று சொல்கிறாள் முல்லை.

எதுக்கு நினைச்ச

எதுக்கு நினைச்ச

ஆமா 100 ஆயுசுன்னு சொன்னியே எதுக்கு என்னை நினைச்சேன்னு கேட்கறான். நேரமாச்சே காணோம்ன்னுதான்னு இவ சொல்றா. மாமா கூட நான் இருக்கேன். அவரை விட்டுட்டு வந்துடறேன்னு இவன் சொல்றான் இதை சொல்றதுக்கா போன் பண்ணுனியன்னு கேட்கிறாள் முல்லை. ஆமாம்னு இவன் சொல்ல, என்கிட்டே சொல்லணும்னு தோணுச்சேன்னு சொல்றா இவ. இனிமே அப்படித்தான்னு சொல்றான் கதிர்.

இப்படி குடும்பம் முழுக்க தென்றல் காற்று வீசற மாதிரிதாங்க விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X