மொக்கை வாங்கிய சீரியல், எண்ட் கார்டு போட்ட விஜய் டிவி... அடுத்த லிஸ்ட் ரெடியா இருக்கு
சென்னை: திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களை காட்டிலும் சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சீரியல்களில் இடம்பெறும் குடும்ப சண்டை, மாமியார் மருமகள் பிரச்னை, குடும்பத்திற்காக பாடுபடும் பெண்களை காணும்போது தனது குடும்பத்தில் இதுபோன்ற கொடுமையை தானும் அனுபவித்துள்ளேன் என்று சில பெண்மணிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளித்திரையில் நடிகர்கள் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்தாலும், சின்னத்திரையில் பெண்கள் தான் சூப்பர் ஸ்டார். வில்லன்களை காணும்போதே இன்று என்ன பஞ்சாயத்துடன் வரப்போகிறார் என்று தெரியவில்லை என்றே உச்சு கொட்டுவர்.
எபிசோடுகள் அதிகரித்தாலும் முடிவு தெரியாமல் தூங்கமாட்டோம் என்பதே ரசிகர்களின் மனநிலையாக உள்ளது. அந்த வகையில், எந்த சீரியல்களை மக்கள் அதிகம் ரசிக்கின்றனர் என்பது டிஆர்பி ரேட்டிங்கை வைத்தே குறிப்பிட முடியும். அந்த வகையில், ரொம்ப சுமாரான சீரியல்களை கூட மக்கள் மன்னித்து பார்த்து விடுவார்கள். மிகவும் மொக்கையாக, கதையும் சரியில்லாமல், நடிப்பவர்களும் சொதப்பினால் அந்த சீரியல் விமர்சன ரீதியாக அடி வாங்கினால் அதற்கு மூடுவிழா நடத்தப்படுவது உண்டு.

மொக்கை வாங்கிய சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் முடிவை எட்டியுள்ளது. மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதாலும், டிஆர்பியிலும் பெரிதாக சோபிக்கவில்லை என்பதே காரணம். இதற்காக புதிதாக வரும் தனம் சீரியலுக்காக வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலை முடிவுக்கு கொண்டு வர விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. இதுவரை வந்த சீரியல்களில் இது வொர்ஸ்ட் என்ற பெயரை பெற்றுள்ளது.
புதுவரவாக வரும் தனம் சீரியல்: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் தங்கையாக நடித்த ஆதிரை என்கிற சத்தியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலின் கதை ஆசைப்பட்ட தனது கணவருடன் சேர்ந்து வாழ்க்கை ஆரம்பிக்கும் போது, எதிர்பாராத விதமாக கணவருக்கு விபத்து ஏற்பட்டு விடுகிறது. கணவருடன் சேர்ந்து வாழ முடியாமல் தனிமையில் கண்ணீருடன் தத்தளிக்கும் தனம், கணவரின் ஆசைகளை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். இதனால், புகுந்த வீட்டில் நுழைந்த தனம், கணவர் அவரது குடும்பத்திற்காக செய்ய நினைத்த விஷயங்களை எல்லாம் தான் முன்னே நின்று செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டி புகுந்த வீட்டில் இருப்பவர்களை கரை சேர்க்க முயற்சி எடுக்கும் ஒரு பெண்ணின் கதையாக உள்ளது.

முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி : தனம் சீரியலை தொடர்ந்து புதுவரவாக பூங்காற்று திரும்புமா என்ற புதிய சீரயலும் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலுக்காக பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியலின் கதை சுமாராக இருந்தாலும், அதில் நடித்த நடிகர்களின் நடிப்பை மறக்க முடியாத அளவிற்கு மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. பார்வையாளர்களும் இதற்கு இல்லையா சார் ஒரு எண்ட் கேட்கும் அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியலின் கதை போர் அடிக்க தொடங்கிவிட்டதாகவே தெரிவிக்கின்றனர். மக்களின் ரசனையை பூர்த்தி செய்யாத வகையில் நகர்ந்து செல்வதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இன்னும் ஓரிரு வாரங்களில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மொத்தமாக பூசணிக்காய் உடைக்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











