"தங்கமே.. தங்கமே ".. தனத்துக்கு வளைகாப்பு.. ரசிகர்கள் பூரிப்பு.. ஒரே குதூகலம்!
சென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்துக்கு வளைகாப்பு காட்சிகள் களை கட்டியுள்ளன.
வளைகாப்பு தடபுடலாக போய்கிட்டு இருக்கும் நேரத்தில் ஒரு சூப்பரான பாட்டுடன் ரீல்ஸ் போட்டுள்ளார் நடிகை சுஜிதா.
எத்தனை வருஷம் ஆனாலும் நிறம் மாறாத தங்கமாகத்தான் ஜொலிக்கிறார் நம்ம சுஜிதா என அதைப் பார்த்து ரசிகர்கள் கொஞ்சுகின்றனர்.

கண்ணழகி சுஜிதா
ரீல்ஸ் வீடியோவாக இருந்தாலும் டைமிங்குக்கு தகுந்த மாதிரி வீடியோவை தான் இப்ப பாண்டியன் ஸ்டோர் டீம் வெளியிட்டு இருக்காங்க . இவர்களுடைய சந்தோசத்தை பார்க்கும்போதே மனதில் இருக்கும் பிரச்சனைகளை மறந்து பார்ப்பவர்களுக்கும் புத்துணர்வு கூடி வருவது உண்மைதான் .அதிலும் தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சுஜிதா வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து பார்த்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
தன்னோட சாந்தமான முகத்தினால் எந்தப் பிரச்சினைகளையும் எளிதாக முடித்து விடும் சுஜிதா தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வளைகாப்பு பங்ஷனில் தேவதை போல வலம் வருகிறார் .கண்ணு பட போகுது சுத்தி போடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இப்ப வைரலாகி வரும் வீடியோவை பார்த்து அசந்து போய் விட்டார்கள் .இவருக்கு பொன் நகைகளே வேண்டாம் இவருடைய புன்னகையே போதும் .ஆனால் தற்போது விதவிதமான நகைகளிலும் கை நிறைய வளையலோடும் கலக்குகிறார்.

ரசிகர்கள் தேடும் தனம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் தற்போது பலருக்கும் ஃபேவரைட். இந்த சீரியலில் பலர் நடித்துக் கொண்டிருந்தாலும் அதிகமான ரசிகர்கள் தேடுவது தனமாக நடிக்கும் சுஜிதாவை தான். இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்து பலருக்கும் பரிச்சயமான நபராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலிலும் இவருடைய கதை இவர் கேரக்டருக்கு செட்டாக இவருக்கு மேலும் ரசிகர்களை கொடுத்திருக்கிறது.

குறையாத அழகு
இந்த சீரியல் தற்போது தனத்தின் வளைகாப்பு பங்ஷனை கொண்டாடி வருகிறது .இந்த சந்தோஷமான நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலர் ஆவலாக காத்திருக்கும் நேரத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் சேர்ந்து லூட்டி அடிக்கும் ஒரு வீடியோவை சுஜிதா வெளியிட்டிருக்கிறார் .அதைப் பார்த்ததும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர் .எத்தனை வருடம் ஆனாலும் இவருக்கு மட்டும் வயது கூடாதா என்று சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறதாம்.
Recommended Video

மயக்கும் பார்வை
'கண்ணால் ஒரு சாடை காட்டு போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன்'என்று ரசிகர்களும் கோரசாக பாடி வருகின்றனர் .அந்த அளவிற்கு அவருடைய எக்ஸ்பிரஸ்னால் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்திருக்கிறார் .இப்படிலாம் அழகா இருந்தா எப்படி தான் இந்த சீரியலை பார்க்காமல் போகிறது உங்களுக்காகவே இந்த சீரியலை பார்த்து வருகிறோம் என்று சிலர் ஐஸ் வச்சிட்டு இருக்காங்க.


Click it and Unblock the Notifications











