பேச்சு வாக்கில் தனுஷ் பற்றிய ரகசியத்தை உளறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்
சென்னை: பேச்சு வாக்கில் தனுஷ் பற்றிய ரகசியத்தை பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் உளறிவிட்டனர்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து கடந்த வாரம் சென்றாயன் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் ஏமாத்து வேலைகள் செய்து அவரை வெளியேற்றினாலும் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
வீட்டை விட்டு செல்லும் முன்பு சென்றாயன் ஒரு ரகசியத்தை உளறியுள்ளார்.

விஜயலட்சுமி
சென்றாயன், விஜயலட்சுமி, ரித்விகா, ஜனனி ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்து படங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். காவியத் தலைவன் படத்தில் நானும் நடித்துள்ளேன் என்று ஜனனி கூறியதை கேட்டு அப்படியா என்றார் விஜி. அப்படியே பேச்சு ரஜினி பக்கம் போய் தனுஷை சென்றடைந்தது. தனுஷின் புதுப்பட ரகசியத்தை உளறிவிட்டனர்.
தனுஷ்
தனுஷ் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் பீரியட் அதாவது வரலாற்று படத்தில் நடிக்கப் போவதாக சென்றாயனும், விஜயலட்சுமியும் உளறிவிட்டனர். அதிலும் சென்றாயன் ரூ. 300 கோடி என்பதை வியந்து சொன்னார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தனுஷ் ரூ. 300 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கிறாரா என்ற வியப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்
தனுஷ் நடிக்கும் வரலாற்று படத்தின் பெயர் குமரிக் கண்டம் என்றும், அதை ஏ.எல். விஜய் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி அல்ல மாறாக ரூ. 150 கோடி என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்று படத்தில் தனுஷ் நடிப்பது தப்பே இல்லை. ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் வரலாற்று படத்தை விஜய்யை நம்பி எப்படி ஒப்படைக்கிறார்கள் என்று கோலிவுட்டில் சிலர் முணுமுணுக்கிறார்கள்.

டிசம்பர்
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படம் வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்கிடையே தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார். ப. பாண்டியை போன்றே இந்த படமும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











