முந்தானையை தூக்கி இடுப்பில் சொருகி.. ராதை ஆக மாறிய தர்ஷா குப்தா!
சென்னை: இதுவரைக்கும் ஹோம்லியாகவும் மாடல் உடையிலயும் கலக்கி வந்த தர்ஷா குப்தா தற்போது தெய்வீக மணம் கமழக் கமழ கைவிரல்களால் வித்தைகள் காட்டியபடி வெளியிட்ட போட்டோக்களை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் கமெண்ட் களால் இன்ஸ்டாகிராமில் நிறைத்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் தோறும் ரசிகர்கள் பட்டாளத்தோடு வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா ஒரு போஸ்ட் போட்டாலும் நச்சென ரசிகர்கள் மனதில் ஒட்டி விடுகிறது.
இதற்கு முன்னர் வரை டிக்டாக்கில் ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தற்போது இன்ஸ்டாகிராம் முழுமூச்சாக நம்பியிருக்கிறார்.

கலக்கல் சீரியல்கள்
அதுமட்டுமல்லாமல் சீரியல்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு பொழுதுபோக்கு என்னவோ ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வது தான். நாம் எப்படி எல்லாம் தன்னுடைய ரசிகர்களை தன்னை நினைத்து உருக வைக்க முடியும் என யோசித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் அறிமுகமானது என்னவோ அவளும் நானும் ௭ன்னும் சீரியலில் மானசா எனும் கேரக்டரில் தான் .அதற்குப் பிறகு அவருக்கு ஹீரோயினி வாய்ப்பை அதுவும் கிராமத்து தேவதையின் வாய்ப்பைக் கொடுத்தது ஜீ தமிழில் முள்ளும் மலரும் சீரியல் தான்

டிக்டாக் பிரபலம்
இந்த சீரியல் மூலமாக குடும்ப தலைவிகள் மனதில் குடும்ப குத்துவிளக்காக இடத்தை பிடித்துக் கொண்டிருந்த அவர் அந்த நேரத்திலேயே கிடைக்கும் நேரங்களில் டிக்டாக்குகளில் இளைஞர்களை பாடாய்படுத்தி யாருடா இந்த பொண்ணு என்று கேட்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். பலருடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது போல இவருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

இன்ஸ்டாவில் அதிரடி
அதனாலேயே இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமும் கிடைத்தது .ஆனால் அதிலிருந்து கொண்டிருக்கும் போதே இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதனை போஸ்ட் போட்டு வந்தார் .சமூக வலைத்தளங்களில் ரொம்பவே ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் நன்றாகவே பிரபலமாகி விட்டார்.

அழகான வில்லி
முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அதற்கு பிறகு இவருக்கு மின்னலே செந்தூரப்பூவே சீரியல்களில் வில்லத்தனத்தை அழகாகவே காட்டும் அழகான ராட்சசி ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. ஹீரோயின்களை விட வில்லிகலே ௮ழகாக இருப்பதால் ரசிகர்கள் என்ன தான் திட்டி தீர்த்தாலும் இவர்கள் இந்த அழகான நடிப்பால் அனைத்தும் மறந்து விடுகின்றனர்.

அசத்தல் வில்லி
அதற்காகவே நாளுக்கு நாள் அழகான வில்லிகள் உருவாகி வந்தாலும் இவர் சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அதுவெல்லாம் எனது நடிப்புக்கு அங்கீகாரம் இல்லை என இவர் வெப் சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். அதுவுமில்லாமல் தற்போது சினிமா வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இவர் சும்மாவே இருந்தால் வேலைக்கு ஆகாது என போட்டோ ஷூட்டில் தனது கவனத்தைச் செலுத்தி வந்து கொண்டிருக்கிறார்.

வேற லெவல்
அடிக்கடி போட்டோசூட் நடத்திக் கொண்டிருக்கும் கொண்டிருக்கும் இவர் தற்போது ௭டுத்திருக்கும் போட்டேஸ்கள் வேற லெவல் இருக்கிறது. இது வரைக்கும் மாடல் உடையிலும் தான் ஷாப்பிங் செல்லும் இடமெல்லாம் ஒரு கேமராமேனை கூட்டிக்கொண்டு போட்டோக்களை எடுத்து குவித்தார் .ஆனால் தற்போது பல நடிகைகளுக்கு முன்மாதிரியாக சேலையை இழுத்து இடுப்பில் சொருகியபடி பரதநாட்டியம் ஆடியப்படி தன்னுடைய முக எக்ஸ்பிரஸனை ராதையை போல காட்டி பல படங்களை ௭டுத்திருக்கிறார்.

தெய்வீகம்தான்
சும்மாவே இவர் போஸ்ட் போட்டதும் கவிதைகளைக் கொட்டும் இவருடைய ரசிகர்கள் இந்த மாதிரி தெய்வீக தரிசனத்தை கொடுத்தால் சும்மா விடுவார்களா. ஹாட்டின்களையும் தனது கவிதைகளையும் பறக்க விட்டு வருகின்றனர் . அதிலும் இவரை மீன்டும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்ததும் அசந்து போன இவருடைய ரசிகர்கள் புகழடன் சேர்ந்து நீங்கள் செய்யும் சேட்டைகள் அழகாக இருக்கிறது .

ரசிகர்கள் உருகுகிறார்கள்
உங்களுக்காகவே இந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்த்துக் கொள்டிருக்கிறோம் என இவரை நினைத்து உருகி வருகின்றனர்.அதுவுமில்லாமல் புகழுடன் சேர்ந்து ஒரு போஸ்ட் போடுங்கள் என ஒரு ரிக்வெஸ்ட் போட்டிருக்கின்றனர் . ரம்யா பாண்டியன் புகழ் ஜோடிதான் ரொம்பப் பிரபலமாக பேசப்பட்டது. அதற்குப் பிறகு அது போல அமையவில்லை.. தர்ஷா அதை சாதிப்பாரா.. பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











