ஐ..ஜாலி.. முகத்தில் கலர் பூசி.. கை ,கால் முளைத்த பட்டாம்பூச்சி போல.. தர்ஷா குப்தா சொன்ன சீக்ரெட் !

சென்னை : ஹோலி பண்டிகை அதுவுமா முகத்திற்கு கலர் பூசி, தர்ஷா குப்தா கலர் கலர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வரும் நேரத்தில் சீக்ரெட்டான ஒரு தகவலையும் கூறியுள்ளார்.

தர்ஷா குப்தா என்ன அப்படி சொல்லி இருப்பார் என்பதை பார்க்க அவரின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் முட்டிமோதி வருகின்றனர்.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

மார்டன் அழகியான தர்ஷா குப்தா கடந்த 2018ல் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். அதனை தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி 2

குக் வித் கோமாளி 2

இருப்பினும், இவரை புகழ் உச்சத்திற்கு கொண்டு சென்றது குக் வித் கோமாளி-2 நிகழ்ச்சிதான். இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார் தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

சின்னத்திரையில்

சின்னத்திரையில்

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் நடிகைகளுக்கு பட வாய்ப்பை பெற்று தருவதில், பெரும் பங்கு வகிக்கின்றனர். சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அளவுக்கு மீறிய கவர்ச்சியில் கூட அவ்வபோது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

வெள்ளித்திரையில்

வெள்ளித்திரையில்

இப்படி புகைப்படங்களை தட்டி விட்டே பட வாய்ப்பை கை பற்றிவரும் நடிகைகளில் ஒருவர் தான் தர்ஷா குப்தா. சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார். மோகன் ஜி, இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாகக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

கை ,கால் முளைத்த பட்டாம்பூச்சி

கை ,கால் முளைத்த பட்டாம்பூச்சி

பட வாய்ப்பு வருவது ஒரு பக்கம் வரட்டும் இணையத்தில் தன்னை வாழவைத்த ரசிகர்களை மறக்கக்கூடாது என்று தினமும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். இன்று ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாடிய தர்ஷா குப்தா , வெள்ளை நிற உடையில், கை நிறை கலர் கலர் வளையல் போட்டுக் கொண்டு, முகம் முழுக்க கலரை பூசிக்கொண்டு, கை , கால் முளைத்த பட்டாம்பூச்சி போல் அழகாக ஜொலித்த தர்ஷா குப்தா, தனது ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவித்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X