குத்துனேன்னு வச்சுக்கோ... கோபத்திலும் கும்முன்னுதான் இருக்காங்க.. செம தர்ஷா!
சென்னை: சிரிச்சா தான் நான் ஸ்ரீதேவி இல்ல முறைச்சாலும் அழகால் அனைவரையும் அப்படியே மயங்கி விடுவேன் என மஞ்சக் காட்டு மைனாவாக தர்ஷா குப்தா வெளியிட்ட போட்டோவை பார்த்து கொஞ்சி தீர்க்கிறார்கள் ரசிகர்கள்.
சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் தர்ஷா தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கொஞ்சலான சிரிப்பால் ரசிகர்களை பாடாய்படுத்தி வந்து கொண்டிருந்தார் .
தற்போது நான் சிரிக்க மட்டுமல்ல முறைத்துக்கொண்டும் வில்லத்தனமும் செய்வேன் என தன்னுடைய ரசிகர்களுக்கு முறைத்தபடி லுக்கு விட்டு ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.

அழகுதான்
அதைப் பார்த்ததும் குஷியாகி போன அவருடைய ரசிகர்கள் முறைச்சாலும் அழகாக க்யூட்டா இருக்கீங்களே தங்கம் என கொஞ்சி உரசிப் பார்க்க ஆசைப்பட்டு வருகின்றனர். அவரே கஷ்டப்பட்டு முறைத்தபடி போஸ் கொடுத்தார் .அவருடைய ரசிகர்கள் அவரை காமெடி பீஸ் ஆக்கி வருகின்றனர். ஆனாலும் சில ரசிகர்கள் ஆதரித்து வருகின்றனர்.

செல்லத்துக்கு தெரியலை
சிலர் செல்லத்துக்கு கோபப்பட கூட தெரியல என்ன சப்போர்ட் பண்ணி வருகிறார்கள் .அவரது மிரட்டலான கேரக்டரை பார்த்து பல ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊற்றி வருவது இவருடைய ரசிகர்களுக்கு தெரியவில்லை. அதனால் தான் இந்த மாதிரி அவருக்காக கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதிலேயும் சிலர் இவரை இப்படி பார்த்ததும் கவிதைகளை பொழிந்திருக்கிறார்கள்.

வாசகர்கள் வர்ணிப்பு
அதில் ஒருவர் பெண்ணே கண்ணைக் கவர்ந்திடும் உன் பேரழகை வர்ணிக்க வார்த்தைகள் கோடி கோடியாய் வசப்படாதே மாந்தளிர் மேனியில் ஆபரணம் பூட்டி அருவி கூந்தலில் மல்லிகை பூ சூட்டி கரு விழியோரம் கண்ணிமையும் தீட்டி கடற்கரை மணலில் உன் பாதம் அதுவே புனிதத்தலம் மனம் வீசிடும் அம்மண். நெடுங்காலம் தொட்டால் சிணுங்கி போல விரும்புகிறேன் உன் கால் கொலுசின் ஓசை கேட்கையில் .உன் பார்வையோ பித்து பிடிக்க வைக்கும் உன் சிரிப்போ சிந்தையை சிதறடிக்கும்.

கூந்தலும் தோகை ஆகுமாம்
உன் உதடோ உளறி திறிய வைக்கும் ,உன் குரலுக்கும் குயிலும் தோற்றிடுமே உன் கூந்தலும் தோகை ஆயிடுமே அற்புதப் படைப்பு தான் பெண்ணினமோ வெண்ணிலவு தன் முகம் காட்டும் மௌன வெட்கம் கொண்ட கதிரவனே மேலே சென்று தன்னை மறைத்துக் கொண்ட அன்பின் வழியே அன்று உன் முகம் கண்டு பொறாமையில் இன்று அமாவாசை என்று சொல்லி மறந்திற்றே என அவருக்காக உருகி உருகி கவிதை போட்டிருப்பதை பார்த்து சிலர் பொறாமையில் எங்களால இப்படி எல்லாம் பீல் பண்ணி எழுத முடியவில்லையே என பீல் பண்ணி வருகின்றனர்.

வைல்ட் கார்ட்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றதால் பலருக்கும் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பிடித்து போனதாம் .ஆனால் இவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியானதும் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றமடைந்து இருக்கின்றனர். அதனால் மீண்டும் வைல்ட் கார்டு வழியாக உள்ளே வந்து விடுங்கள் என்று இவருக்கு அன்பு கட்டளையும் விட்டு வருகின்றனர் .

புகழுடன் செய்த அக்கப்போர்
இந்த நிகழ்ச்சியில் இவரும் புகழும் செய்த அக்கப்போருக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருந்ததால் .இவர் இல்லாமல் இவருடைய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள். அதனால் மீண்டும் என்ரி கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூறிவருகின்றனர். இவர் சீரியல்கள் ஒருபுறம் யூடியூப் சேனல் ஒருபுறம் என பிஸியாக இருப்பதால் அடிக்கடி போஸ்ட் போட முடியவில்லை என கூறியிருக்கிறார் .

இன்ஸ்டாவின் இன்ப ராணி
அதனால் இவரை இன்ஸ்டாகிராமில் பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இவர் எப்பவாவது தான் வருவதால் ரொம்பவே பீல் பண்ணி வருகிறார்கள். அதனால் தினமும் வந்து தரிசனத்தை காட்டுங்கள் தர்ஷா என கமெண்டுகளை கொட்டி வருகின்றனர். எப்படியோ,, ரசிகர்களை தக்க வைத்து டெய்லி லைம்லைட்டிலேயே வச்சிக்குறாங்க தங்களை.


Click it and Unblock the Notifications











