பட்டுப் பாவாடை சட்டையில்.. மூச்சு முட்ட வைக்கும் தர்ஷா குப்தா.. வேற லெவல்!

சென்னை : பார்த்தாலே போதை ஏற்றும் கரு விழிகளால் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் வீடியோக்கள்.

பிளாஷ்பேக் என்றால் இந்த மாதிரி இருக்க வேண்டும் என செந்தூரப்பூவே சீரியல் தர்ஷாவின் எபிசோடுகளை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

வில்லத்தனங்கள் செய்யும் வில்லியாக இருந்தாலும் அழகில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடறீங்களே என்றும் கொஞ்சி வருகின்றனர்.

அழகிய வில்லி

அழகிய வில்லி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலின் வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா தற்போது இன்ஸ்டாகிராமில் குட்டி நயன்தாராவாகவும் ,ஜெனிலியாவின் தங்கச்சி ஆகவும் ரசிகர்களை அசத்திக் கொண்டிருக்கிறார். என்னதான் இவர் சீரியலில் வில்லத்தனம் செய்து கொண்டிருந்தாலும் நிஜத்தில் இவரை பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுப் போயிரும்.

மனதில் ஒட்டிக் கொண்டார்

மனதில் ஒட்டிக் கொண்டார்

நடிகைகள் எத்தனை பேர் புதுசு புதுசாக அறிமுகம் ஆனாலும் ஒரு சிலர் மட்டும்தான் பார்த்ததும் பக்கத்து வீட்டு பெண் போல மனதில் ஒட்டிக் கொள்வர் .அந்த வகை பெண்களில் தர்ஷாவும் ஒருவர். இவர் முதல் சீரியலில் கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தார் .முள்ளும் மலரும் சீரியலில் இவர் அறிமுகமாகும்போது பக்கா கிராமத்து பெண்ணாக அப்படியே நடிப்பில் பின்னி எடுத்து இருந்தார்.

Recommended Video

Dharsha Gupta பிறந்தநாளில் செய்த நல்ல விஷயம் | Angel Birthday, Cook with Comali
இப்ப செக்கச் செவப்பு

இப்ப செக்கச் செவப்பு

இந்த சீரியலில் கருப்பாக இருந்த இவர் தற்போது கலராக மாறி விட்டார் என சிலர் கலாய்த்து வருகின்றனர்.
உண்மையில் முள்ளும் மலரும் சீரியலுக்காக இவரை மேக்கப் எதுவும் போடாமல் கருப்பாக காட்டி இருந்தனர். அதனைப் பார்த்து உண்மை என நம்பிய ரசிகர்கள் தற்போதும் கூட தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் லைவில் வரும்போது மேக்கப் எதுவுமில்லாமல் ஒரிஜினல் கலர் அது தானா என்று கேட்டு வருகின்றனர் .

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

இவருக்கு சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது .அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். இவர் சூட்டிங் ஸ்பாட்டில் ப்ரீயாக இருக்கும் நேரத்தில் அடிக்கடி வீடியோக்களும் போட்டோக்களும் தான் எடுத்து வருகிறார் .அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் அடிக்கடி பதிவிட்டு வருவது இவருடைய வாடிக்கையாக இருந்தாலும் இவர் ஒருநாள் போஸ்ட் போட வில்லை என்றால் இவரை தேடும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.

வீடியோக்கள் பேமஸ்

வீடியோக்கள் பேமஸ்

அதனால்தான் இவரும் பார்த்துப் பார்த்து ரசிகர்களுக்காக போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம். தற்போது செந்தூரப்பூவே சீரியலில் பிளாஷ்பேக் ஒளிபரப்பப்பட்டு வருகிறது .அதில் தர்ஷா குப்தா பள்ளி செல்லும் சிறுமியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதற்காக மேக்கப் போட்டுக்கொண்டு கிளம்பி இருந்தாலும் அதில் அப்படியே ஒரு வீடியோவை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விடுவோம் என ரெட்டை சடையும் ,பட்டுப் பாவாடையும் கை நிறைய வளையலோடு சினேகாவின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாட்டுக்கு செம எக்ஸ்பிரஷன் காட்டியிருக்கிறார்.

பல்லாங்குழி

பல்லாங்குழி

இவருடைய இந்த வீடியோவை பார்த்ததும் பலர் வர்ணிக்க வார்த்தை இன்றி தவித்து வருகின்றனர். ஜெனிலியாவின் தங்கச்சி போல இருக்கீங்களே என்று சிலர் கமெண்டில் தெரிவித்திருக்கின்றனர் .அது மட்டுமல்லாமல் ஐயா படத்தில் நயன்தாரா எப்படி பிளாஷ்பேக்கில் பார்ப்பவர்களை மிரட்டி இருக்கிறாரோ அந்த மாதிரி நீங்க, வேற லெவல் என சிலர் ஐஸ் வைத்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X