வில்லியாக நடிப்பது ரொம்ப கஷ்டம்… சீரியல் நடிகை தர்ஷினி
சீரியல்களில் அமைதியான பெண்ணாக நடிப்பதை விட வில்லியாக நடிப்பதுதான் மிகவும் கஷ்டமானது என்று கூறி வருகிறார் லேட்டஸ்ட் வில்லி தர்ஷினி.
சன் டிவியில் வெள்ளைத் தாமரையில் கல்லூரி பெண்ணாக அறிமுகமானவர் தர்ஷினி. நாதஸ்வரம் தொடரில் தங்கையாக நடிக்கிறார். ஜெயாடிவியில் காலபைரவன் தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
தற்போது தேவதை தொடரில் "வில்லியாக நடிக்கிறார். வில்லியாக நடிப்பது பற்றி எல்லோரும் விசாரிக்கிறார்கள். அதற்காக நான் வெட்டகப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

அழவைக்கும் நடிப்பு
நாதஸ்வரம், காலபைரவன் தொடரில் நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். அமைதியான பெண்ணாகவும், பிறரை அழ வைக்கிற பெண்ணாகவும் நடிக்கிறேன்.
வில்லி கதாபாத்திரம்
இதைப் பற்றி யாருமே கேட்கவில்லை. ஆனால் தேவதை தொடரில் வில்லியாக நடிப்பது பற்றி மட்டும் தவறாமல் கேட்கிறார்கள்.
எனக்கு சந்தோசம்தான்
பார்க்கிறதுக்கு அமைதியான பொண்ணா, அழகான பொண்ணா இருக்கிறீங்க, நீங்க ஏன் வில்லியா நடிக்கிறீங்க என்கிறார்கள். நீயா அப்படி நடிக்கிறாய் என்று ஆச்சர்யத்தோடு கேட்கிறார்கள். இது, எனக்கு சந்தோசம்தான்.
ரொம்ப கஷ்டம்
சீரியலில் வில்லியாக நடிப்பது எவ்ளோ கஷ்டம் என்பது பலருக்குத் தெரியாது. ஷாட் இல்லாத நேரத்துல அப்படி சிரிச்சு பேசிக்கிட்டிருப்போம் ஷாட்ல முறைக்கணும். இது அடுத்தடுத்த நிமிடத்துல நடக்கும்.
ரொம்ப பிடிச்சிருக்கு
ஆனாலும் வில்லியாக நடிப்பது ரொம்ப பிடிச்சிருக்கு. தேவதையில் திட்டினாலும், நாதஸ்வரத்தில் பாராட்டுறாங்க. இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறுகிறார் தர்ஷினி.


Click it and Unblock the Notifications











