Dhivyadharshini: டிடியை அலேக்காக தூக்கி சுற்றிய நபர்..யாருப்பா இவரு? டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளனியாக தனது பயணத்தை தொடங்கிய டிடி, அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து அந்த தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாகவே மாறிவிட்டார்.டிடிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில், டிடியை அலேக்காக ஒருவர் தூக்கி சுற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பொஸஸிவ்னஸில் பொங்கி வருகின்றனர்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமா வரை அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளினியாகவே இருக்கிறார் டிடி. ஷாருக்கான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த அவரை கட்டி அணைத்து ஆசையாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதே போல லியோ படத்தின் வெற்றிவிழாவில், விஜய்யே டிடியை அழைத்து கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திவ்யதர்ஷினி: கலப்பாக பேசி அனைவர் மனதிலும், இடம்பிடித்த டிடி, கால் வலிக்காக சிகிச்சை செய்ய அது தவறாகி போக, கடந்த 10 ஆண்டுகளாக கால் வலியுடன் போராடி வந்தார். அண்மையில் டிடி இதற்காக மீண்டும் முழங்காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அந்த போட்டோக்களை இணையத்திலும் அவர் பதிவிட்டு இருந்தார். இப்போது மெல்ல மெல்ல கால் வலியில் இருந்து மீண்டு வரும் டிடி, ஒரு சில முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
யாருப்பா அந்த நபர்: இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் டிடி, ஒரு டிராவல் பிரியை ஆவார். எப்போதும், ஏதாவது ஒரு புதிய ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
இதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பாலோவர்களை அதிகரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிடியை அலேக்காக தூக்கி ரொமான்டிக்காக சுற்றி இருக்கிறார். இந்த வீடியோவைப்பார்த்து பொஸஸிவ்னஸில் பொங்கி ரசிகர்கள், யாருப்பா அந்த நபர் என கேட்டு , டிடியின் கமெண்ட் பாக்சை நிரப்பி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











