“சர்வைவர்“ நிகழ்ச்சியில் நானா?... அடப்பாவிகளா…ஷாக்கான டிடி!
சென்னை : தொகுப்பாளினி டிடி எனும் திவ்ய தர்ஷினியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.. அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் சரி.. சினிமா பிரபலங்களை பேட்டி காண்பதிலும் சரி செம கில்லாடி..
தற்போது அந்தமானில் ஓய்வு எடுத்து வரும் டிடி, தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் கலகலப்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அந்த பதில்கள் தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

திவ்யதர்ஷினி
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தவர் தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி. தன்னுடைய திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார்.

காபி வித் டிடி
விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இவர் தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

அடப்பாவிகளா?
தற்போது, ஓய்வுக்காக அந்தமான் சென்றுள்ள டிடி, நான் இப்போ அந்தமானில் இருக்கிறேன்... அந்தமானிலிருந்து நான் உங்கக்கிட்ட கலந்துரையாடலில் பேச போகிறேன் என்று கூறியிருந்தார். உடனே ஒரு ரசிகர் சர்வைவர் நிகழ்ச்சிக்கு ஷீஃப் கேஸ்டா தானே போறீங்க? என்று கேட்டுள்ளார். இதற்கு டிடி அடப்பாவிகளா...எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க என்று பதிலளித்துள்ளார்.

என்கிட்ட மோதாதே சீசன்3
மேலும் ஒரு ரசிகர் என்கிட்ட மோதாதே சீசன்3 எப்போக்கா வரும் என்று கேட்டிருந்தார். அதற்கு டிடி Hopefully soon அப்படினு பதிலளித்து இருந்தார். விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி என்கிட்ட மோதாதே இதில் 2 சீசன்கள் முடிந்துள்ளன. இரண்டு சீசன்களையும் டிடி தொகுத்து வழங்கி இருந்தார்.

முக்கிய நிகழ்ச்சியில் மட்டும்
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி தற்போது முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால், அவர் முக்கியமான நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்குகிறார். அண்மையில் நயன்தாராவை இன்டர்வியூ எடுத்திருந்தார். இந்த இன்டர்வியூ வேறலெவலில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











