கண்ணம்மாவை தேடிச் செல்லும் பாரதி...க்ளைமேக்சை நெருங்குகிறதா பாரதி கண்ணம்மா?

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிக பிரபலமானவற்றில் ஒன்று பாரதி கண்ணம்மா. 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 500 க்கும் அதிகமான எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஆலியா மானசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விஜய் டிவி சீரியல்களில் ரேட்டிங்கில் கூட பாரதி கண்ணம்மா தான் முதல் டாப். ஆலியா நடிக்கும் ராஜா ராணி 2 சீரியல் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. இத்தனைக்கும் இவை இரண்டுமே ரீமேக் சீரியல்கள் தான்.

ரீமேக் சீரியல்கள்

ரீமேக் சீரியல்கள்

இந்தி டிவி சீரியலான தியா அவுர் பாட்டி ஹம் என்ற தொடர் தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் ஒளிபரப்பானது. இதே கதை தற்போது ராஜா ராணி 2 என்ற பெயரில் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதே போன்று மலையாள டிவி சீரியலான கருத்தமுத்து ரீமேக் தான் தற்போது பாரதி கண்ணம்மாவாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா கதை

பாரதி கண்ணம்மா கதை

கருப்பாக இருக்கும் பெண் அதனால் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்வதாக கதை ஆரம்பமாகிறது. பிறகு பணக்கார குடும்பத்தை சேர்ந்த டாக்டர், கருப்பாக இருக்கும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மருமகளின் நிறத்தை காரணமாக காட்டி அவரை நிராகரிக்கும் பணக்கார மாமியார், பிறகு புரிந்து கொண்டு அன்பை பொழிகிறார்.

தொடரும் கதை

தொடரும் கதை

காதலை பொழியும் டாக்டர் கணவர், குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என டாக்டர்கள் சொல்லிய பிறகு திடீரென மனைவி கர்ப்பமடைவதால், டாக்டர் தோழியின் பேச்சை நம்பி மனைவியை சந்தேகப்படுகிறார். அதனால் கணவன் மனைவி பிரிவு, இரட்டை குழந்தைகளில் ஒன்றை பிரிவது என கதை நகர்கிறது.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

இதில் நேற்றைய எபிசோடில், பாரதியிடம் வளரும் ஹேமாவின் உயிரை காப்பாற்ற கண்ணம்மாவை அழைத்து வர செல்கிறார். இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ப்ரோமோவில், கண்ணம்மாவிடம் விஷயத்தை கூறி கூப்பிடுகிறார் பாரதி. முதலில் மறுக்கும் கண்ணம்மா, பிறகு ஹேமாவிற்காக வருகிறேன் என கூறி காரில் செல்கிறார்.

பாரதிக்கு உண்மை தெரிய வருமா

பாரதிக்கு உண்மை தெரிய வருமா

காரில் செல்லும் போது பாரதிக்கு, காதலிக்கும் காலத்தில் நடந்த பழைய நிகழ்வுகள் நினைவிற்கு வருகிறது. டென்ஷனாக காரை ஓட்டும் பாரதிக்கு தண்ணீர் கொடுத்து, சமாதானப்படுத்தி, ஆறுதல் வார்த்தை பேசுகிறார் கண்ணம்மா. மருத்துவமனை வரும் கண்ணம்மாவிற்கும், பாரதிக்கும் ஹேமா தங்களின் மகள் தான் என்ற உண்மை தெரியுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Recommended Video

Bharathi Kannamma சீரியல் சூட்டிங்கில் கலந்து கொள்ளாத Kannamma | Raja Rani, Kannana Kanne
பாரதி கண்ணம்மா முடிய போகிறதா

பாரதி கண்ணம்மா முடிய போகிறதா


பாரதி, கண்ணம்மாவை ஏற்கும் மனநிலைக்கு வருவதால் ஹேமா, லட்சுமி இருவரும் இவர்களின் குழந்தைகள் என்ற உண்மை, வெண்பா செய்த தில்லுமுல்லு ஆகியவை தெரிய வேண்டியது தான் மீதம் உள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் க்ளைமாக்சை நெருங்குவதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X