naam iruvar namakku iruvar serial: தாமரை கழுத்துல மாயண்ணந்தேன் தாலி கட்னாப்டியா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தம்பி பொண்டாட்டி தாமரைக்கு மாயன் தாலி கட்டின மாதிரி எபிசோட் முடிச்சு இருக்காங்க. எல்லாரும் ஸ்தம்பிச்சு நின்ன மாதிரி காண்பிச்சு முடிச்சுட்டாங்க.
மாயனும் அரவிந்தும் இரட்டையர்கள்... மாயனுக்கு தாமரையையும், அரவிந்தும் தேவியையும் கல்யாணம் பேசி முடிச்சு இருந்த நேரத்துலதான், படிக்காத மாயன் படிச்ச தேவிக்கு தாலியை கட்டிட்டான்.குழப்பத்துல டாக்டருக்கு படிச்ச அரவிந்தும் படிக்காத தாமரைக்கு தாலி கட்ட வேண்டியதா போச்சு.
இப்போ மறுபடியும் தம்பி பொண்டாட்டி தாமரை கழுத்துல மாயன் தாலி கட்டிட்ட மாதிரி காமிச்சு இருக்காங்க. இரட்டையராச்சே.. அரவிந்த் மாயன் வேஷத்துல தாமரை கழுத்தில் தாலி கட்டவும் வாய்ப்பு இருக்கு.

வேஷம் கலைப்பாய்ங்களோ
இன்றைய எபிசோடில், இவன் மாயன் இல்லை.. அரவிந்த்தான்னு வேஷத்தை கலைப்பாங்களோன்னு திருப்தி பட்டுக்கிட்டு, காத்து இருக்காங்க சீரியல் ஆர்வலர்கள். காரணம், தம்பி பொண்டாட்டி கழுத்தில் தாலி கட்டினா பண்பாடு என்னாவது? அப்புறம் சீரியல் முழுக்க கதையை இப்படியே இழுத்தாலும் அவமானக் கேடுதானே! வேஷத்தைக் கலைத்தால் மட்டுமே கதை எடுபடும்.

தாமரைக்கு மறு கல்யாணம்
படிக்காத தாமரை மருமகளாக வந்ததுனாலதான் அரவிந்தின் வளர்ப்பு அம்மாவுக்கு மருமகளை பிடிக்காம போகுது. இதனால் வந்த வம்பு சண்டையில்தான், தாமரைக்கு அவங்கள் வீட்டில் இன்னொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறாங்க. இப்போ இந்த மருமகள்தான் வேணும் என்று மாமியார் நினைக்க, அரவிந்தும், தாமரையும் இப்போதுதான் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க.

நிறுத்தணும் கல்யாணத்தை
கல்யாணத்தை நிறுத்த மாயன் போராட்டத்தில் இருக்கான். அரவிந்தை பிடிச்சு கட்டிப்போட்டு வச்சுட்டாங்க. தாமரையையும் மண மேடைக்கு கொண்டு வந்தாச்சு. சட்டு புட்டுன்னு தாலியை கட்டிட்டு போலாம்னு மாப்பிள்ளை மந்திரத்தை கூட பாதி சொன்னால் போதும்னு பறக்கறான்.இவன் அவஸ்தை புரியாம மாயன், அரவிந்த் மைண்டு வாய்சுல பேசிக்கிட்டு இருக்காங்க.

தாலி மாயன்
தாமரையோட தாய் மாமனுக்கு கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்தியா இருக்கும் போல.. தம்பி பொண்டாட்டி தாமரைக்கு இன்னொரு கல்யாணம் செய்துவைக்க மாயன்தான் தாலி எடுத்து தரணும். மாப்பிள்ளை தாலி கட்டுவதை புருஷன் அரவிந்த் பார்க்கணும் என்று மாயன் கையில் தாலியை எடுத்து கொடுக்க சொல்றார். தாலியை எடுத்த மாயன் எல்லாரும் பார்த்து இருக்க, அதோடு பொண்டாட்டி தேவியும் பார்த்துக்கொண்டு இருக்க..தம்பி பொண்டாட்டி கழுத்தில் தானே தாலியை கட்டிட்டான்.


Click it and Unblock the Notifications











