விஜய் TV 18+ சர்டிஃபிகேட் வாங்கிட்டாங்களா? Second Love ப்ரோமோவால் வந்த விவாதம்.. உண்மை என்ன?

சென்னை: விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் வரும் 13-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான Second Love, டெலிகாஸ்ட் தொடங்கும் முன்பே சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக, இந்த நிகழ்ச்சியின் புரொமோக்கள் மற்றும் போட்டியாளர்களின் அறிமுக வீடியோக்கள் வெளியான பிறகு, இணையம் முழுவதும் கலவையான விமர்சனங்களும், சர்ச்சைகளும் வெடித்துள்ளன.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, ஆறு ஆண் போட்டியாளர்கள், ஆறு பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 12 பேர் ஒரே வீட்டில் தங்க வைக்கப்படுகிறார்கள். ஏற்கனவே காதலில் தோல்வியை சந்தித்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் மீண்டும் காதல் மலருமா, புதிய வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வார்களா என்பதுதான் நிகழ்ச்சியின் முக்கிய கான்செப்ட். வாரம் முழுவதும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக, வார இறுதியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளார்.

இதற்கிடையில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் அறிமுக வீடியோக்களை விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதில் நடிகை சாய் பிரியங்கா ரூத் தொடர்பான அறிமுக வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ள அவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Did Vijay TV Get an 18 Certificate Here s the Truth Behind the Second Love Promo Controversy

வேதனையில் நெட்டிசன்ஸ்: இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், "கலர்ஸ் தமிழில் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு என்ன நடந்ததோ, அதே மாதிரி பிரியங்காவுக்கும் நடந்துவிடக் கூடாது" என்று பதிவிட்டிருந்தார். மேலும், "விஜய் டிவி கடந்த ஆண்டே 18+ சர்டிஃபிகேட் வாங்கியது இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத்தானோ?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

18+ சர்டிஃபிகேட்: ஆனால், இந்த தகவலில்தான் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. இந்தியாவில் திரைப்படங்களுக்கு மட்டுமே தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தொலைக்காட்சி சேனல்களுக்கு தனியாக "A" அல்லது "18+" சான்றிதழ் வழங்கும் நடைமுறையே கிடையாது. ஒரு பிரதான பொழுதுபோக்கு டிவி சேனல், இப்படியான ஏ சர்டிஃபிகேட் வாங்கி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த தகவல் உண்மையல்ல.

Did Vijay TV Get an 18 Certificate Here s the Truth Behind the Second Love Promo Controversy

விமர்சனங்கள்: அதேநேரத்தில், Second Love நிகழ்ச்சியின் புரொமோக்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வருவது மட்டும் உண்மை. குறிப்பாக, காதல், ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளை மையமாக வைத்து புரொமோக்கள் உருவாக்கப்பட்டிருப்பதால், "பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் லவ் டிராக்கையே தனியாக ஒரு ஷோவாக எடுத்திருக்கிறார்கள் போல இருக்கிறது", "குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியுமா?", "இந்த மாதிரியான நிகழ்ச்சி தேவையா?" என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

அதே சமயம், மற்றொரு தரப்பினர், "புரொமோவை மட்டும் பார்த்து நிகழ்ச்சியை எடை போட முடியாது. முழு எபிசோட்கள் ஒளிபரப்பான பிறகுதான் அது எப்படி இருக்கும் என்பது தெரியும்" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X