For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக விஜய் டிவி விஜே பப்பு களமிறங்குகிறார்?

  |

  சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்களின் ஃபேவரைட்டாக இருக்க உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனுக்கும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வருகிறது.

  நான் வாழ்க்கையில் வாங்கிய ஒரே பரிசு | VJ Pappu Fun Speech | Adangamai Audio Launch | Filmibeat Tamil

  கடந்த மூன்று சீசன்களில் இல்லாத அளவிற்கு நான்காவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு ஓட்டுகள் எண்ணிக்கையிலும் சாதனை படைத்தது.

  கணவரின் லவ் ஸ்டோரியை பார்த்து சமந்தா போட்ட கமெண்ட்...குழப்பத்தில் ரசிகர்கள் கணவரின் லவ் ஸ்டோரியை பார்த்து சமந்தா போட்ட கமெண்ட்...குழப்பத்தில் ரசிகர்கள்

  இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளயிருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் அரசல் புரசலாக வெளிவர இப்போது விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் விஜே பப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது .

  புது விதமான அனுபவத்தை

  புது விதமான அனுபவத்தை

  பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது தென்னிந்தியாவில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் பிக் பாஸ் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முற்றிலும் தமிழ் ஆடியன்ஸுக்கு புது விதமான அனுபவத்தை கொடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

  அதிக ஓட்டு வித்தியாசத்தில்

  அதிக ஓட்டு வித்தியாசத்தில்

  தொடர்ந்து வெளியான இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நான்கு சீசன்களில் முதல் மூன்று சீசன்களில் இல்லாத அளவிற்கு நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை அதிக அளவில் கிடைத்ததாக கூறப்பட்டது. அதில் நடிகர் ஆரிக்கு இதுவரை இல்லாத அளவிற்கு அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  சீசன் 5 ப்ரோமோ

  சீசன் 5 ப்ரோமோ

  4 சீசன்கள் முடிந்தாலும் 5வது சீசனிலும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விரைவிலேயே தொடங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிக் பாஸ் சீசன் 5யும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். எதையும் வித்தியாசமாக செய்யும் பிக் பாஸ் குழு சீசன் 5 ப்ரோமோவையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. நிகழ்ச்சி இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது.

  ரம்யா கிருஷ்ணன்

  ரம்யா கிருஷ்ணன்

  இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆவல் பெரும்பான்மையான மக்கள் மத்தியில் இருக்க சீரியல் நடிகை பவானி ரெட்டி, யூடியூப் புகழ் ஜி பி முத்து, திருநங்கை நமிதா மாரிமுத்து, ரம்யா கிருஷ்ணன், எம் எஸ் பாஸ்கர், ஜான் விஜய்,ஷகிலாவின் மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, சுனிதா, செய்திவாசிப்பாளர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மைனா நந்தினி என பலர் போட்டியாளராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

  விஜே பப்பு

  விஜே பப்பு

  இந்த நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான விஜே பப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைத் துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலகலப்பான பேச்சின் மூலம் விஜேவாக தனி இடத்தை பிடித்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

  பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக

  பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக

  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் அனைவரையும் சிரிக்க வைத்து தொகுப்பாளராக இருக்கும் விஜே பப்பு வணக்கம் தமிழா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதேசமயம் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் 2வது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 5ல் பப்பு போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

  English summary
  latest sources said that vijay tv's vj pappu is to participate in bigg boss tamil season 5. He also acts in a lead role in untitled movie and second hero in actor srikanth's movie. vj pappu hosted many popular shows in vijay tv like cook with comali, kalakka povadhu yaru.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X