அடேங்கப்பா...பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பவர்களுக்கு இவ்வளவு சம்பளம் ?
சென்னை : தற்போது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. அதிரடி திருப்பங்களுடன் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த சீரியல்.

இப்போது ரசிகர்கள் பலரின் மனதிலும் உள்ள கேள்வி, பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் ஒன்று சேர்வார்களா? கண்ணம்மாவிற்கு தனது குழந்தைகள் பற்றிய உண்மை எப்போது தெரியும்? வெண்பா என்ன ஆவார் ? என்பது தான்.
பலரும் இந்த சீரியலை நிஜ வாழ்க்கையில் நடக்கும் கதையாகவே நினைத்து பார்த்து வருகின்றனர். நடிகர், நடிகைகளில் நிஜ பெயர்களை மறந்து கேரக்டர் பெயர்களை சொல்லியே கூப்பிட்டு வருகின்றனர்.
தினமும் இந்த சீரியல் பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியாகி, பரபரப்பை கிளப்புவது வாடிக்கையாகி விட்டது. சமீபத்தில் இந்த சீரியலில் டாக்டர் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதால் இனி அவர் நடிக்க மாட்டாரா, அவருக்கு பதில் யார் நடிப்பார்கள் என்பது போன்றவை பரபரப்பாக பேசப்பட்டது.
லேட்டஸ்ட்டாக இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தினசரி சம்பளம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மை தானா என தெரியவில்லை. ஆனாலும் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதன்படி கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரி பிரியனுக்கு தினசரி சம்பளமாக ரூ.20,000 கொடுக்கப்படுகிறதாம். இதே போல் பாரதியாக நடிக்கம் அருண் பிரசாத்திற்கும் ரூ.20,000 கொடுக்கப்படுகிறதாம்.
ரூபஸ்ரீ (செளந்தர்யா) - ரூ.15,000, ரிஷி கேசவ் (வேணு) - ரூ.12,000, ஃபரீனா (வெண்பா) - ரூ.10,000, அகிலன் - ரூ.10,000, கண்மணி (அஞ்சலி) ரூ.9000, செந்தில்குமாரி (பாக்யலட்சுமி) - ரூ.5000 தினசரி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.


Click it and Unblock the Notifications











