விஜய் டிவி பிரியங்காவின் யூட்யூப் வருமானம் எவ்வளவு தெரியுமா... தெரிஞ்சா அசந்துடுவீங்க

சென்னை : கடந்த 5 ஆண்டுகளில் யூட்யூப் மற்றும் அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்களின் வாழ்வில் அன்றாட தேவையாகி விட்டது யூட்யூப். பலரும் யூட்யூப் சேனல் துவங்கி, வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சாமானியர்கள் மட்டுமல்ல பல டிவி மற்றும் சினிமா பிரபலங்களும் யூட்யூப் சேனல் துவங்கி, அதன் மூலம் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனை பலரும் ரசித்து, தங்களின் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். திரை பிரபலங்கள் யூட்யூப் மூலமும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

பிரியங்கா யூட்யூப் சேனல்

பிரியங்கா யூட்யூப் சேனல்

அப்படி யூட்யூப் சேனல் துவங்கி, வெற்றிகரமாக நடத்தி வரும் பிரபலங்களில் ஒருவர் விஜய் டிவி.,யின் நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜே பிரியங்கா. சப்பாத்தி செய்வது எப்படி, அதை சாப்பிடுவது எப்படி, சட்னி அரைப்பது எப்படி என விதவிதமாக இவர் பதிவிடும் காமெடி வீடியோக்கள் மிகவும் பிரபலம். சமீபத்தில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட பிரியங்கா, பாத்ரூம் போவதும், வருவதுமாக இருக்கும் நிகழ்வுகளையே ஒரு வீடியோவாக பதிவிட்டிருந்தார்.

இவ்வளவு சம்பளமா

இவ்வளவு சம்பளமா

இந்த வீடியோ செம வைரலானது. ஏராளமானோரால் ரசிக்கப்பட்ட வீடியோவாக இந்த வீடியோ உள்ளது. இப்படி பிரியங்கா பதிவிடும் பல வீடியோக்கள் பாப்புலர் ஆகி உள்ளன. யூட்யூப் மூலம் மட்டும் பிரியங்கா மாதம் ரூ.7 லட்சம் வரை சம்பாதித்து வருகிறாராம். இந்த தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர் சம்பளம்

பிக்பாஸ் போட்டியாளர் சம்பளம்

இந்நிலையில் அக்டோபர் 3 ம் தேதி துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராகவும் பிரியங்கா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் தருவதாக சமீபத்தில் நடிகை தீபா கூறி இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா

பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா

ஏற்கனவே யூட்யூப் மூலம் மாதம் 7 லட்சம் சம்பாதித்து வரும் பிரியங்கா, பலரின் ஃபேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுவதால் இவரின் சம்பளம் என்னவாக இருக்கும் என்று பலர் கேட்க துவங்கி விட்டனர்.

விஜய் டிவி பிரபலங்கள்

விஜய் டிவி பிரபலங்கள்

பிரியங்காவை போல் மற்றொரு விஜய் டிவி பிரபலமான விஜே மணிமேகலை, தனது கணவர் ஹுசைனுடன் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்ப்பதை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். மணிமேகலை, பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமியாக நடிக்கும் ரக்ஷா உள்ளிட்டோர் நடத்தும் Vlog களும் மிக பிரபலம்.

சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர்களும், பிறகு என்ன ஆனார்கள் என தெரியவில்லை. ஆனால் இப்போது யூட்யூப் சேனல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X